Advertisment

கிரிக்கெட் வினாடி வினா நடத்திய அஸ்வின்... டக்கு டக்குன்னு பதில் சொன்ன மகள்கள் - வீடியோ!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் மகள்கள், டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கு முன்னதாக தங்கள் கிரிக்கெட் அறிவை வெளிப்படுத்தி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
R Ashwins Daughters Show Off Their Cricket Knowledge Video goes viral Tamil News

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ravichandran Ashwin | T20 world cup 2024: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின். அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தந்து பள்ளித் தோழியான பிரித்தி நாராயணனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அகிரா மற்றும் ஆத்யா என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர். 

Advertisment

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கு முன்னதாக தங்கள் கிரிக்கெட் அறிவை வெளிப்படுத்தி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளனர். அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் ஹேண்டில் வெளியிட்ட வீடியோவில், அவர் தனது மகள்களுடன் ஜாலியாக கிரிக்கெட் வினாடி வினா கேள்விகளை கேட்கிறார். அப்போது அகிரா மற்றும் ஆத்யா ஆகிய இருவரும் டக்கு டக்குன்னு பதில் சொல்கிறார்கள். 

சில கேள்விகளுக்கு அவர்கள் இருவரும் விழிபிதுங்கினாலும், அப்பா க்ளூ கொடுக்க, அவர்கள் இருவரும் போட்டி போட்டு பதில் கொடுத்து, ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரின் மகள்கள் என்பதை நிரூபிக்கிறார்கள். அஸ்வின், 'டி20 உலகக் கோப்பை போட்டிகள் எந்தெந்த நாடுகளில் நடக்கிறது? என்றும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி எந்த நகரில் நடக்கிறது? வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் யார்? போன்ற கேள்விகளை அவர்களிடம் கேட்கிறார். 

அத்துடன், இந்திய தலைமை பயிற்சியாளர் யார்? என்றும் அவர்களிடம் கேட்கிறார். இதில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியை நியூயார்க் நடத்துவது பற்றிய கேள்வியைத் தவிர அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் சரியாக பதிலளித்து அசத்துகிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அஸ்வின் மகள்களின் கிரிக்கெட் அறிவை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். 

 

 

 



 டி20 உலகக்கோப்பையில் இந்தியா 

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற ஜூன் 2 முதல் 29 வரை நடக்க உளள்து. தற்போது இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கும் நிலையில், ஜூன் 5 ஆம் தேதி நியூயார்க்கில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம்  ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி நாளை சனிக்கிழமை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ravichandran Ashwin T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment