Advertisment

ஜடேஜாவின் குளோன்... சி.எஸ்.கே-வில் ஜொலிக்கும் நியூசி., நட்சத்திரம்!

ஐ.பி.எல் மினி ஏலத்தில், நியூசிலாந்தைச் சேர்ந்த 24 வயதான இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் 1.8 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அது தற்போது அந்த அணிக்கு பெரும் பலத்தையும், பலனையும் தந்துள்ளது.

author-image
WebDesk
New Update
rachin ravindra csk ipl best signing ravindra Jadeja Tamil News

ரச்சினுக்கு உதவுவது என்னவென்றால், அவர் அதிரடியாக பவுண்டரிகளை விரட்டுகிறார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Chennai Super Kings | Rachin Ravindra | Ravindra Jadeja | IPL 2024: சமூக வலைதள பக்கமான சப்ரெடிட்-இல் (subreddit) ஐ.பி.எல் குறித்து விவாதிக்கப்படும் போது, அந்த தளமே போர் களமாகிவிடுகிறது.  நேற்றிரவு சப்ரெடிட் பயனர்கள் அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றைப் பற்றி ரசிகர்கள் கூறினர். ஒரு ரசிகர், "ஐ.பி.எல் மினி ஏலத்தில் ரச்சின் ரவீந்திரா ஏன் இவ்வளவு குறைவான விலைக்கு போனார் என்று யாராவது விளக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார். 

Advertisment

அதற்கு பதிலளித்த மற்றொரு ரசிகர், "சி.எஸ்.கே அணியைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் முட்டாள்கள். ஏனென்றால், தங்கள் திறனை நிரூபித்த இளம் வீரர்களை அவர்கள் ஏலத்தில் அதிகம் எடுக்கவில்லை. அடுத்த சில சீசன்களில் ரச்சின் ரவீந்திராவால் சி.எஸ்.கே வெற்றிப் பாதையில் சென்றால், மற்ற அனைத்து அணிகளும் பட்டங்களை வெல்ல தகுதியற்றவை தான்" என்று அவர் விளக்கினார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Rachin Ravindra, an instant hit: With sensational start to life at CSK, Kiwi star could already be signing of IPL 2024

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐ.பி.எல் மினி ஏலத்தில், நியூசிலாந்தைச் சேர்ந்த 24 வயதான இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் 1.8 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அது தற்போது அந்த அணிக்கு பெரும் பலத்தையும், பலனையும் தந்துள்ளது. 

தங்களது தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் எதிரணியை வீழ்த்தும் அவர்களின் வெற்றிகரமான பாணியில் இருந்து, இப்போது சேப்பாக்கத்தில் நல்ல பேட்டிங் ஆடுகளத்தை கொண்டுவந்துள்ளது சி.எஸ்.கே. இது வீரர்கள் அதிரடியாக ரன்களை குவிக்க உதவுகிறது. அல்லது சி.எஸ்.கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி மறுநாள் இரவு கூறியது போல், "ஸ்டீபன் ஃப்ளெமிங் திட்டம் அடித்து ஆட வேண்டும் என்பது தான்" என்று குறிப்பிட்டார். 

சென்னை அணியின் முன்னணி தொடக்க வீரரான நியூசிலாந்தைச் சேர்ந்த டெவோன் கான்வேயின் காயம், சி.எஸ்.கே-வின் தற்போதை தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா ஆசீர்வாதமாக அமைத்துள்ளது. இடது கை வீரரான அவர் பவுலர்களை பந்தாடி வருகிறார். "அவர் ஆரம்பத்தில் இரண்டு நல்ல ஷாட்களைப் அடித்தவுடன், அவருக்குள் தன்னம்பிக்கை வளர்ந்தது. ஆம், நான் இந்த களத்தில் சிறப்பாக ஆட முடியும் என்று அவர் நம்பினார், மேலும் அவர் அங்கிருந்து வளர்ந்துவிட்டார்" என்று ஹஸ்ஸி நம்பிக்கை தெரிவித்தார். 

ரச்சினுக்கு உதவுவது என்னவென்றால், அவர் அதிரடியாக பவுண்டரிகளை விரட்டுகிறார். “ஒரு ஷாட் அழகாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அணிக்கு அது நான்கு ரன்கள்தான். அது தெர்டுமேனுக்கு அருகில் உருண்டு பவுண்டரிக்கு சென்றாலும் கூட அணிக்கு தேவையானது அந்த 4 ரன்கள் தான். எனவே, அதை அவர் எடுக்கிறார். என்று ரச்சின் கடந்த ஆண்டு இந்த இதழுக்கு அளித்த பேட்டியில் தனது பேட்டிங் நம்பிக்கையைப் பற்றி கூறியிருந்தார். 

இந்த ஆண்டு ஐபிஎல்-ல் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் தனது முதல் பவுண்டரியை எட்ஜ் அடித்து எடுத்தார். பந்து ஃபைன் லெக் வழியாக பவுண்டரி கோட்டை தொட்டது. பிறகு, அந்த அணியின் பீல்டிங் செட்-அப்பை உடைக்க அவர் ரிஸ்க் எடுத்து சில ஷாட்களை ஆடியதை நாம் காண முடிந்தது. இதுபோன்ற சில ஷாட்கள் சென்னை அணிக்கு முந்தைய சீசன்களில் தேவைப்பட்டது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. 

குறிப்பாக இந்தியாவில் விளையாடும் போது, ​​அபாயகரமான ஷாட்களுக்கான அந்த ஆசை, ரச்சினின் பாடப்புத்தகமாக இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. “இந்திய கிரிக்கெட் வீரர்களை அவர் பின்பற்றிய விதத்தில் அப்பாவிடமிருந்து நிறைய வந்திருக்கிறது. என் உத்வேகத்திற்காக நான் அந்த நபர்களைப் பார்த்தேன். டிராவிட் மற்றும் சச்சின் எப்படி தங்கள் மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்தை இடைவெளியில் வைத்து ஆற்றலை உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் பார்த்தால், மிகச் சிறந்த தொழில்நுட்பத் தளம் இருந்தும், அது நான் மிகவும் ரசித்த ஒன்று,” என்று அவர் ஒப்புக்கொண்டார்.

ரச்சின் வெறும் 19 பந்துகளில் 46 ரன்கள் எடுத்ததால் அந்த மணிக்கட்டு வேலைகளை நேற்றிரவு பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்தியாவுக்கான அவரது கடைசி சுற்றுப்பயணத்தில், ஸ்கொயருக்குப் பின்னால் பிக்பாக்கெட் ரன்களை எடுக்க அவர் கட்டவிழ்த்துவிட்ட ஷாட் அது. குஜராத்திற்கு எதிராக, ரச்சின் அவரது  சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக உமேஷ் யாதவ் பந்தை அவர் ஸ்லைஸ் போல, அசையாமல் நின்று, ஃபுல்லெங் டெலிவரியில் சிக்ஸர் பறக்கவிட்டார். இதேபோல், ஆன்-டிரைவ்வில் அவர் அஸ்மத்துல்லா ஒமர்சாய் பந்தை சிக்சருக்கு விளாசினார். முன்னோக்கி அழுத்தி மற்றும் தரையில் பந்தை இயக்குவதற்காக அவரது மணிக்கட்டை வளைத்தார். ரஷித் கானுக்கு எதிராக அவர் கிரீஸில் ஆழமாக இருந்து கவர் திசையில் எளிதாக பந்துகளை விரட்டினர். 

ஜடேஜாவின் குளோன்

2021 இல் நியூசிலாந்து அணியுடன் இந்தியாவிற்கு முதல் சுற்றுப்பயணத்திற்கு வந்த ரச்சினின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியது. இரு அணிகளைச் சேர்ந்த படேல்களும் ரவீந்திரர்களும் தங்களது ஜெர்சிகளை அணி இருந்தனர். அந்த தருணத்தை நினைவு கூர்ந்த ரச்சின், “இது உண்மையில் தற்செயலாக நடந்தது. அங்கிருந்த மீடியா நண்பர்கள் புகைப்படம் எடுத்தனர்" என்று கூறினார். தற்போது இருவரும் ஒரே ஐ.பி.எல் அணிக்காக விளையாடுகிறார்கள். குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரச்சின் டைவ் அடித்து கேட்ச் எடுத்த போது, அவர்களின் முதுகில் உள்ள பெயர் மட்டுமல்ல, அவர்களின் விளையாடும் பண்பில் கூட ஒற்றுமை உள்ளதை வெளிப்படுத்துகிறது.  

இடது கையில் பேட்டிங் ஆடும் இடது கை ஆர்த்தடாக்ஸ் பந்துவீச்சாளர்கள் அற்புதமான பீல்டர்களாக இருப்பார்கள். அவ்வகையில், ஒரு சில போட்டிகளில் ஆடியுள்ள ரச்சின் பீல்டராக தனது பன்முகத் திறனைக் காட்டியுள்ளார். ஜடேஜா போல் அவரும் செயல்பட்டுள்ளார் எனலாம். பெங்களூருக்கு எதிராக, 24 வயதான ஃபாஃப் டு பிளெசிஸின் லோ-டைவிங் கேட்சை பவுண்டரிக்கு அருகில் பிடித்தது. இதேபோல், அஸ்மத்துல்லா ஒமர்சாய் விளாசிய பந்தை எக்ஸ்ட்ரா கவரில் இருந்து திரும்பி ஓடி, அதை ரிவர்ஸ் கேட்ச் பிடித்து அசத்தி இருந்தார். 

"ஜடேஜாவை நான் வணங்குகிறேன்" என்று ஒப்புக்கொண்ட  ரச்சின், அவரைப் போல உண்மையான ஆல்-ரவுண்டராக இருப்பது தனது லட்சியம் என்கிறார். "அணி சமநிலையைப் பொறுத்தவரை, இது நிறைய உதவுகிறது. எனது திறமையை நான் பார்த்தால் - முதல் மூன்று இடங்களில் பேட் செய்து, ஒரு டர்னிங் விக்கெட் அல்லது அது எங்கிருந்தாலும் முழுவதும் பந்துவீசுவது, அணியை சமநிலைப்படுத்த உதவுகிறது. அது கூடுதல் பேட்டராக இருந்தாலும் சரி, பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, அது எனக்கு முக்கியம். குறிப்பாக இந்தியாவில் அந்த ஆழத்தைப் பெற முடியும். நான் எப்பொழுதும் பந்துவீசுவேன், அது ஆரம்பத்திலிருந்தே என்னுள் இருக்கும் ஒரு பகுதியாகும். நான் வெளிப்படையாக எனது பேட்டிங்கில் அதிக நேரத்தை செலவிட்டேன் ஆனால் எனது பந்துவீச்சை தொடர்ந்து மேம்படுத்த விரும்புகிறேன்." என்று அவர் கூறினார். 

தற்செயலாக, நியூசிலாந்திற்கு ரச்சினின் முதல் போட்டி, அவர் சுழற்பந்து வீச்சாளர் என்ற உண்மையின் காரணமாக அணியில் சேர்க்கப்பட்டார். ஒருவேளை அவர் சமீபத்தில் இந்தியாவில் தங்கியிருப்பது, அவரது ரோல்மாடலான ஜடேஜாவுடன் டிரஸ்ஸிங் அறையைப் பகிர்ந்துகொள்வது, அதை மாற்றக்கூடும். ஒரு சுழற்பந்து வீச்சாளராக தனது தகுதியை உறுதிப்படுத்த அவருக்கு உதவக்கூடிய ஒரு ஐ.பி.எல் அணி இருக்கும் என்றால், அந்த அணி தான் தற்போது அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.  அவர்கள் அவ்வாறு செய்தால், "மற்ற அனைத்து அணிகளும் *நிச்சயமாக*  பட்டங்களை வெல்ல தகுயற்றவை தான்".

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Super Kings Ravindra Jadeja IPL 2024 Rachin Ravindra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment