20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று ரோஜரின் சாதனையை முறியடித்த நடால்!

நான்கு முறை அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வென்ற இவர் இரண்டு முறை விம்பிள்டன் பட்டத்தையும் ஒரு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளார்.

Rafael Nadal ties Roger Federer at 20 Grand Slams by beating Novak Djokovic in Paris

Rafael Nadal ties Roger Federer at 20 Grand Slams by beating Novak Djokovic in Paris :  நேற்று நடைபெற்ற ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிக்கை வீழ்த்தி பட்டம் வென்றார் ரஃபேல் நடால்.ரஃபேல் நடாலின் டென்னிஸ் போட்டியாளர் என்றால் அது ரோஜர் ஃபெடரெர் தான். அவர் வென்ற அனைத்து போட்டிகள் துவங்கி சாம்பியன்ஷிப் என அனைத்தையும் வென்றார் ரஃபேல். ஆனால் அவருக்கு ரோஜரின் கிராண்ட் ஸ்லாம் வெற்றியை ஒரு கை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நீடித்த வண்ணமே இருந்தது.

அவரின் நீண்ட நாள் ஆசையை நேற்று நிறைவேற்றியுள்ளார். ரோலாண்ட் கரோஸில் 6-0 6-2 7-5 என்ற நேர் செட் கணக்கில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜோகோவிக்கை வென்று இந்த மகத்தான சாதனையை புரிந்துள்ளார் அவர்.

34 வயதான ஸ்பெய்ன் நாட்டு வீரரான இவர் 2005 முதல் 2008 வரை தொடர்ச்சியாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டத்தை வென்றார். மீண்டும் 2010 முதல் 2014 வரை 5 முறை ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டத்தை வென்றார். நான்கு முறை அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வென்ற இவர் இரண்டு முறை விம்பிள்டன் பட்டத்தையும் ஒரு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rafael nadal ties roger federer at 20 grand slams by beating novak djokovic in paris

Next Story
டெல்லியை வீழ்த்தி பலத்தை நிரூபித்த மும்பைmi vs dc mumbai indians vs delhi capitals match
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express