ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் இடையே நடைபெற்ற 2022ம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ரஃபேல் நடால் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
ஆஸ்திரேலியாவில், மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி 5 மணி நேரம் 24 நிமிடம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ரஃபேல் நடால், 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், 21 ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை வென்று உலக சாதனை படைத்தார்.
இது ரஃபேல் நடாலுக்கு இரண்டாவது ஆஸ்திரேலிய ஓபன் பட்டமாகும். 13 ஆண்டுகளுக்கு முன் 2009இல் அவர் இப்படத்தை வென்றிருந்தார்.
இதுவரை, டென்னிஸ் வீரர்களில், ரஃபேல் நடால் மற்றும் அவருடைய சம கால வீரர்களான ரோஜர் ஃபெடெரர், நோவக் ஜோகோவிச் ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தலா 20 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தனர்.
இந்நிலையில்தான், ரஃபேல் நடால் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் 21 கிராண்ட் ஸ்லாம் பெற்று உலக சாதனை படைத்தார்.
ரஃபேல் நடால் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னர், 13 ஆண்டுகளுக்கு முன் 2009ல் அவர் இப்படத்தை வென்றிருந்தார்.
டென்னிஸில் ஆண்கள் தரவரிசையில் உலகின் முதல்நிலை வீரராக உள்ள நோவக் ஜோகோவிச் கோவிட் தடுப்பூசி போடாததால், அவருடைய ஆஸ்திரேலியா விசா ரத்து செய்யப்பட்டது. இதனால், அவர் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் கலந்துகொள்ளவில்லை.
இதற்கு முன்னர், அமெரிக்கவின் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”