Advertisment

ஃபிரெஞ்ச் ஓபன்: 11வது முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால்

ஒட்டு மொத்தமாக இது நடாலின் 17வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஃபிரெஞ்ச் ஓபன்: 11வது முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால்

ஆசைத் தம்பி

Advertisment

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.

இதில், கடந்த 9ம் தேதி நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப்பும் (ருமேனியா) 10-வது இருக்கும் இருக்கும் ஸ்டீபன்சும் (அமெரிக்கா) மோதினர். ஆட்டத்தின் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றிலும் 4-4 என கடும் போட்டி அளித்தார் ஸ்டீபன்ஸ். அதன்பின்னர், சுதாரித்துக் கொண்ட ஹெலப். சிறப்பாக ஆடி 6-4 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றை கைப்பற்றினார்.

இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் ஹெலப் அபாரமாக விளையாடினார். இதனால் மூன்றாவது சுற்றை 6-1 என்ற கணக்கில் மிக எளிதாக கைப்பற்றினார்.இறுதியில், 3-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஹெலப்.

நேற்று (10.06.18) ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் ரஃபெல் நடால், உலகின் ஏழாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் மோதினர். முதல் செட்டை 6-4 எனவும், 2-வது செட்டை 6-3 எனவும், 3-வது செட்டையும் 6- 2 எனக் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 11-வது முறையாக ஃபிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை நடால் வென்றார்.

அவர் ஏற்கனவே ஃபிரெஞ்ச் ஓபன் தொடரை 10 முறை வென்று இருக்கிறார். ஒட்டு மொத்தமாக இது நடாலின் 17-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று முதலிடத்தில் உள்ளார்.

Simona Halep
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment