இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவரை கெளரப்படுத்திய ஐசிசி!

விருதை இதற்கு முன் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி, கபில்தேவ் மற்றும் அனில் கும்ளே ஆகியோர் பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட்டுக்கு ஐசிசி ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருது அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் தற்போது இந்திய இளையோர் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டுவருகிறார். இந்திய அணியை பொருத்தவரையில் இவரின் பங்களிப்பு ஏராளம். 1996 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த டிராவிட் இதுவரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,288 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் 344 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,889 ரன்களை எட்டியுள்ளார் என்பது ஒட்டு மொத்த கிரிக்கெட் துறையையும் பெருமைபட வைக்க தருணம். இத்தனை சாதனைகளை செய்த பெருஞ்சுவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கௌரவப்படுத்தும் விதமாக ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் ராகுல் டிராவிட்டின் பெயரை இணைத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக, ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படும் இவ்விருதுகள், ஒரு கிரிக்கெட் வீரருக்கு மிகுந்த மதிப்புடைய உயர் விருதாக கருதப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இதில் ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சமந்தா க்ளேர் டைலர் மற்றும் இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பெருமையை பெறும் ஐந்தாவது இந்திய வீரர் ராகுல் டிராவிட் என்பது கூடுதல் சிறப்பு. ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதை இதற்கு முன் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி, கபில்தேவ் மற்றும் அனில் கும்ளே ஆகியோர் பெற்றுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close