/indian-express-tamil/media/media_files/DcqmPnWIidzrVDwWkdcP.jpg)
ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
T20 World Cup 2024 | Virat Kohli | Axar Patel | Ravindra Jadeja: 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நேற்று வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து, இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த பீல்டர் பதக்கம் அணிக்கப்பட்டது. இதற்கான போட்டியாளர்களாக அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல், ஆகிய 3 வீரர்களை பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் அறிவித்தார்.
பும்ரா பந்தில் நஜிபுல்லா சத்ரான் கொடுத்த கேட்சை அர்ஷ்தீப் அசத்தலாக பிடித்தார். அதே நேரத்தில், அஸ்மத்துல்லா ஓமர்சா அடித்த பந்தை அக்சர் அற்புதமான கேட்ச் ஆக எடுத்து நடப்பு தொடரில் ஜடேஜா தனது முதல் விக்கெட்டை கைப்பற்ற உதவினார்.
அர்ஷ்தீப் மற்றும் அக்சர் ஆகிய இருவரை விட 3 கேட்சுகளை லாவகமாக பிடித்து மிரட்டி இருந்தார் ஜடேஜா. அவர் பும்ரா பந்தில் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் கொடுத்த கேட்ச், குல்தீப் யாதவ் பந்தில் முகமது நபிக் கொடுத்த கேட்ச், அர்ஷ்தீப் சிங் பந்தில் ரஷித் கான் கொடுத்த கேட்ச் என ரவீந்திர ஜடேஜா பம்பரமாக சுழன்று கேட்ச் பிடித்து அசத்தினார். அதனால் அவருக்கே சிறந்த பீல்டர் விருது வழங்கப்பட்டது. அதனை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணிவித்து மகிழ்ந்தார். அப்போது அவரை ஆரத்தழுவிய ஜடேஜா கட்டியணைத்து மேலே தூக்கி கொண்டாடி மகிழ்ந்தார்.
அக்சர், கோலி ஆச்சரியம்
இதனிடையே, தனது பெயரை சற்றும் எதிர்பாராத அக்சர் படேல், பெயர் அறிவிக்கப்பட்டதும் அப்படியே ஆச்சரியப்பட்டு போனார். இதேபோல், விராட் கோலி உட்பட பலரும் ஆச்சரியமடைந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.