Ravindra Jadeja Tamil News: 15வது ஆசியா கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நேற்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்றைய (ஞாயிற்று கிழமை) ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் தொடரில் 2வது முறையாக மோதுகின்றன.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஜடேஜாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறினார். உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் இருக்கிறது. எனவே, அவரை அதிலிருந்து விலக்கிவிட முடியாது. அவர் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளார். அதைப் பற்றி எங்களுக்கு தெளிவான விவரம் கிடைக்கும் வரை நான் அவரை நிராகரிக்கவோ அல்லது அதிகமான கருத்துக்களை வெளியிடவோ விரும்பவில்லை” என்று கூறி விளக்கமளித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக வலம் வரும் ரவீந்திர ஜடேஜா, ஆசிய கோப்பையில் இந்தியாவுக்காக இரண்டு போட்டிகளிலும் (பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்( விளையாடினார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளை தெறிக்கவிட்டு 35 ரன்கள் எடுத்தார். அவரின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil