Advertisment

தந்தை வழியில் மகன்... இந்திய யு-19 அணியில் சேர்ப்பு; கலக்கும் குட்டி டிராவிட்!

18 வயது ஆல்ரவுண்டர் வீரரான சமித் டிராவிட் தற்போது நடைபெற்று வரும் மஹாராஜா டி20 கே.எஸ்.சி.ஏ போட்டியில் அசத்தலான சிக்ஸர் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 Rahul Dravids son Samit Dravid included in India U 19 squad Tamil News

19 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.

19 வயதுக்குட்பட்ட இந்தியா - ஆஸ்திரேலியா ஆடவர் அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்  புதுச்சேரியிலும், 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் நடைபெற உள்ளது. 

Advertisment

இந்நிலையில், இந்த தொடருக்கான 19 வயதுக்குட்பட்ட இந்திய ஆடவர் அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 19 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Rahul Dravid’s son Samit Dravid included in India U-19 squad

18 வயது ஆல்ரவுண்டர் வீரரான சமித் டிராவிட் தற்போது நடைபெற்று வரும் மஹாராஜா டி20 கே.எஸ்.சி.ஏ போட்டியில் அசத்தலான சிக்ஸர் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 82 ரன்கள் எடுத்துள்ளார். அவர் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி, குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணிக்கு எதிராக அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். 

இன்று சனிக்கிழமை இந்த தொடருக்கான இரண்டாவது அரையிறுதி நடைபெறும் நிலையில், சமித் டிராவிட் இடம் பெற்றுள்ள மைசூர் வாரியர்ஸ் ஹூப்ளி டைகர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்குகிறது.

கடந்த ஆண்டு மன அழுத்த முறிவுக்கு ஆளான சமித் டிராவிட்  இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்நாட்டுப் போட்டிகளான வினூ மன்காட் மற்றும் கூச் பெஹார் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அவர் வினு மங்கட் டிராபியில் நான்கு இன்னிங்ஸ்களில் 122 ரன்கள் எடுத்தார். அவரது அதிகபட்ச 87 ரன்களாக இருந்தது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இரண்டிலும் முக்கிய பங்கு வகித்த அவர் கூச் பெஹார் டிராபியை கர்நாடகா வெல்ல உதவினார். சமித் 8 போட்டிகளில் மூன்று அரைசதம் பிளஸ் ஸ்கோர்களுடன் 362 ரன்களை குவித்தார். மேலும் 19.31 சராசரியில் 16 விக்கெட்டுகளையும் எடுத்தார்.

ஒரு நாள் தொடருக்கான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி: ருத்ரா படேல் (துணை கேப்டன்), சாஹில் பராக், கார்த்திகேயா கே.பி, முகமது அமான் (கேப்டன்), கிரண் சோர்மலே, அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் பங்கலியா (விக்கெட் கீப்பர்), சமித் டிராவிட், யுதாஜித் குஹா, சமர்த் என், நிகில் குமார், சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ், ரோஹித் ரஜாவத், முகமது எனான். 

நான்கு நாள் தொடருக்கான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி: வைபவ் சூர்யவன்ஷி, நித்யா பாண்டியா, விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்), சோஹம் பட்வர்தன் (கேப்டன்), கார்த்திகேய கே.பி, சமித் டிராவிட், அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் பங்கலியா  (விக்கெட் கீப்பர்), சேத்தன் சர்மா, சமர்த் என், ஆதித்யா ராவத், நிகில் குமார், அன்மோல்ஜீத் சிங், ஆதித்யா சிங், முகமது எனான். 

தேதி | நேரம் | போட்டி | இடம்:

1) செப்டம்பர் 21 | காலை 9:30 முதல் ஒருநாள் போட்டி | புதுச்சேரி

2) செப்டம்பர் 23 | காலை 9:30 மணிக்கு 2வது ஒருநாள் போட்டி | புதுச்சேரி

3) செப்டம்பர் 26 | காலை 9:30 மணிக்கு 3வது ஒருநாள் போட்டி | புதுச்சேரி

4) செப்டம்பர் 30 - அக்டோபர் 3 காலை 9:30 முதலாவது 4 நாள் போட்டி | சென்னை

5) அக்டோபர் 7-10 காலை 9:30 | 2-வது 4 நாள் போட்டி | சென்னை. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Rahul Dravid Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment