/tamil-ie/media/media_files/uploads/2022/07/tamil-indian-express-2022-07-29T173027.963.jpg)
Rahul Gandhi took to Twitter to share the story of Bharat who practiced and hones his bowling skills by making fishnet nets Tamil News
Rahul Gandhi asked Rajastha cm Ashok Gehlot to help the boy achieve his dream Tamil News: இளம் வீரர் பரத் சிங் மீன்பிடி வலையைப் பயன்படுத்தி பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவைப் பார்த்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அவருக்கு கிரிக்கெட் அகாடமி சேர வாய்ப்பு வழங்கி கொடுத்துள்ளார்.
Rahul Gandhi took to Twitter to share the story of Bharat who practiced and hones his bowling skills by making fishnet nets Tamil News
கிரிக்கெட் ஒரு உலகப் புகழ் பெற்ற விளையாட்டாக உருவெடுத்துள்ளது. இந்த விளையாட்டை பின் தொடரும் வீரர்களும், ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதில், தங்களது திறனை நிரூபிக்க விரும்பும் வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை இணைய மற்றும் சமூக வலைதளங்களில் அன்றாட பதிவிட்டு வருகின்றனர். அதன் மூலம் பலருக்கும் தங்களின் விளையாட்டு ஆர்வத்தையும், திறனையும் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுவன் தனது பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தும் வீடியோவை தீபக் சர்மா என்ற பத்திரிக்கையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 16 வயதான இளம் வீரர் பரத் சிங் மீன்பிடி வலையைப் பயன்படுத்தி பந்துவீச்சு பயிற்சி எடுக்கிறார்.
राजस्थान के राजसमंद ज़िले का यह 16 वर्षीय बच्चा अद्भुत प्रतिभा का धनी है।
छोटे से गाँव में मछली के जाल को नेट्स बना कर अभ्यास कर रहे भरत सिंह का जज़्बा देखते ही बनता है।
अगर इस युवा को प्रोफेश्नल मदद मिल जाए तो क्या पता आगे चल कर देश को एक शानदार गेंदबाज मिल जाए। pic.twitter.com/X4b8tuj8Jt— Deepak Sharma (@DeepakSEditor) July 27, 2022
இந்நிலையில், இளம் வீரர் பரத் சிங் மீன்பிடி வலையைப் பயன்படுத்தி பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவைப் பார்த்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வியப்படைந்துள்ளார். மேலும், அச்சிறுவனின் கனவை நிறைவேற்ற உதவும்படி ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டை கேட்டு கொண்டார்.
இந்த வீடியோவை பகிர்ந்த ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், "நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அற்புதமான திறமைகள் ஒளிந்துள்ளன, அதை அங்கீகரித்து ஊக்குவிப்பது நமது கடமை. அசோக் கெலாட் இந்த சிறுவனின் கனவை நனவாக்க உதவுங்கள்" என்று பதிவிட்டு இருந்தார்.
हमारे देश के कोने-कोने में अद्भुत प्रतिभा छिपी हुई है, जिसे पहचानना और बढ़ावा देना हमारा कर्तव्य है।@ashokgehlot51 जी से मेरा निवेदन है, इस बच्चे का सपना साकार करने के लिए कृपया उसकी सहायता करें। https://t.co/vlEKd8UkmS
— Rahul Gandhi (@RahulGandhi) July 27, 2022
இதற்கு ட்விட்டரில் பதிலத்த முதலமைச்சர் அசோக் கெலாட், "நிச்சயமாக, அதை மேலும் எடுத்து, தேவையானதைச் செய்வேன்." என்று உறுதியளித்தார்.
Sure, will take it further and will do the needful. https://t.co/6kzc4TgdBj
— Ashok Gehlot (@ashokgehlot51) July 27, 2022
முதலமைச்சரின் ட்வீட்டிற்குப் பிறகு, விளையாட்டு அமைச்சர் அசோக் சந்த்னா ட்வீட்டிற்கு பதிலளித்து, ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் இளம் வீரர் பரத் சிங் நுழைவதை உறுதி செய்தார். அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்த வீரரின் திறமையை மேம்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். விரைவில் இந்த குழந்தைக்கு ஜெய்ப்பூரில் உள்ள ஸ்போர்ட்ஸ் அகாடமியில் அனுமதி பெற்று அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்." என்று பதிவிட்டார்.
माननीय मुख्यमंत्री श्री @ashokgehlot51 जी की खेलों के प्रति समर्पित भावना के अनुरुप इस खिलाड़ी की प्रतिभा को निखारने के लिए हम प्रतिबद्ध हैं।
शीघ्र ही इस बच्चे को जयपुर की खेल एकेडमी में प्रवेश दिलाकर समस्त सुविधाएं उपलब्ध करवाई जाएगी। @RahulGandhi https://t.co/OX8FMI6FqF— Ashok Chandna (@AshokChandnaINC) July 27, 2022
இந்த ட்வீட்கள் வைரலான உடனேயே, உதய்பூரில் உள்ள ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியின் தலைவர் வைபவ் கெலாட் முன் பாரத் தனது கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தினார்.
“நான் கும்பல்கரில் (ராஜ்சமந்த்) மொஜவடோன் கா குடா கிராமத்தைச் சேர்ந்த நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளர் பரத் சிங்கை சந்தித்தேன். ஆடுகளத்தில் அவரது செயல்திறனைக் காண நான் அவரை உதய்பூருக்கு அழைத்தேன். மேலும் அவரது தந்தையைச் சந்தித்து மாநிலத்தின் இந்த வளர்ந்து வரும் திறமையான பந்து வீச்சாளரை ஊக்கப்படுத்தினேன்.
ராகுல் காந்தியும் இந்த நம்பிக்கைக்குரிய சிறுவனின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவரது திறமையை மெருகேற்ற ஜெய்ப்பூரில் உள்ள ஹாஸ்டல் உள்ளிட்ட அகாடமிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன." ”என்று வைபவ் தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.
உதய்பூரில் உள்ள கிரிக்கெட் பயிற்சியாளரான மனோஜ் சௌத்ரி, பாரத் திறமையானவர், திறன் கொண்டவர், ஆனால் அவரது ஆட்டத்தை மேம்படுத்த பயிற்சி தேவை என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.