Advertisment

ஒருநாள் லெவனில் ராகுலுக்கு அதிக முக்கியத்துவம்: சூரியகுமார் இடத்திற்கு ஆபத்தா?

இந்தியாவின் ஒரே மிஸ்டர் 360 ஆன அவரின் பேட்டிங் பாணி ஒருநாள் போட்டிகளில் நம்பர் 5 இடத்தில் மிகக் கச்சிதமாக பொருந்துகிறது

author-image
WebDesk
New Update
Rahul taking Surya’s spot in India’s ODI XI? tamil news

The brand of white-ball that Rohit Sharma's team has been aspiring to master for the past one year comes naturally to Suryakumar, India's only Mr 360 batsman.

News about KL Rahul - Suryakumar Yadav in Tamil: இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 373 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா (83) மற்றும் சுப்மான் கில் (70) அரைசதம் விளாச, அவர்களைத் தொடர்ந்து வந்த கோலி (113) சதம் விளாசி மிரட்டினார். இதனால் இந்தியாவுக்கு வலுவான ஸ்கோர் கிடைத்தது. இந்திய டாப் ஆடர் இத்தகைய பேட்டிங்கை வெளிப்படுத்திய போதிலும், நாம் அது பற்றி பேசும் கட்டாயம் எழுந்துள்ளது. ஏனென்றால், இந்தியா இன்னும் 9 மாதங்களில் தனது சொந்த மண்ணில் ஒருநாள் கோப்பையை விளையாட இருக்கிறது.

Advertisment

அதனால், இந்த நேரத்தில் சாத்தியமான சில புதிர்களுக்கு விடை கிடைக்க வேண்டும். இதை இரண்டு வழிகளில் சொல்லலாம்: விளையாடும் லெவனில் சூரியகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷானை எவ்வாறு பொருத்துவது? என்பது தான்.

தற்போது இந்திய அணியில் இடம் பிடிக்க நிலவும் போட்டியில், சூரியாவுக்கு இடமளிக்க, மற்ற இரண்டு விஷயங்கள் சிக்காமல் இருக்க வேண்டும். இந்திய சிந்தனைக் குழு அதை இப்போது தேவையற்றதாகக் கருதலாம். ஆனால் சமீபத்திய உலகக் கோப்பைகளில் நாம் பார்த்தது போல், மிகவும் தைரியமான ஒரு அணியே வெற்றியை ருசிக்கிறது. எனவே, கோப்பைகளை வெல்ல தேர்வாளர்கள் தைரியமான சில முடிவுகளை எடுத்து, அணியை அடுத்த தளத்திற்கு தள்ள வேண்டும்.

ஸ்ரேயாஸ் அய்யர் ஒருநாள் ஃபார்மெட்டில் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். கடந்தாண்டில் அதிகபட்ச ஸ்கோரை குவித்த வீரராகவும் அவர் இருக்கிறார். அதனால், சூரியாவால் அணியில் அவருக்கு பதிலாக இடம்பிடிக்க முடியாது. அப்படி அவரை அணியில் சேர்க்க தேர்வாளர்கள் இரண்டு முக்கிய காய்களை (வீரர்களை) நகர்த்தியாக வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் நிலையான மற்றும் 43.87 சராசரியுடன் 88.53 ஸ்டிரைக் ரேட்டில் 5-வது இடத்தில் இருக்கும் கே.எல்.ராகுல் தனது தற்போதைய ஃபார்மை தொடர்ந்தால், சூரியாவுக்கான கதவை அவர் திறக்கலாம்.

ஆனால் ராகுல் விக்கெட் கீப்பராக இருப்பதாலும், குறிப்பாக ரிஷப் பண்ட் நீண்ட காலம் மறுவாழ்வுப் பயிற்சியில் இருப்பவர் என்பதாலும், இஷான் கிஷன் உள்ளே வர முடியும். அதன்பின் சுப்மான் கில் மீது அழுத்தம் அதிகமாகி அவரது ஆட்டத்தை மேம்படுத்தி, அதிக அளவில் செயல்படத் தொடங்க வேண்டும். இல்லையெனில், அவருக்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க வீரராக முன்னேறலாம். அப்படி நடந்தால், சூரியகுமார் நம்பர் 6ல் களமாடும் வாய்ப்பு கிடைக்கும். இஷான் கிஷன் இடது கை ஆட்டக்காரர் என்பதால், அவரை கூடுதல் விருப்பமாக பார்க்கலாம்.

கடந்தாண்டில் கே. எல் ராகுல் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்கள் உட்பட 251 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதில் ஒரு அரைசதம் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பார்லில் தொடக்க வீரராக களமிறங்கியது போது வந்தது. ​​மற்றொன்று மிர்பூரில் வங்கதேசத்துக்கு எதிராக 5வது இடத்தில் பேட்டிங் செய்த போது வந்தது. அவரின் ஸ்ட்ரைக் ரேட் 80.19 ஆகவும், சராசரி 27.88 ஆகவும் உள்ளது.

இதிலிருந்து ராகுல் அதிக அழுத்தத்தில் விளையாடும் வீரராக தென்படுகிறார். இது உலகக் கோப்பை ஆண்டு என்பதால், இப்போது அவர் மீது அதிக கவனம் செலுத்தப்படும்; அவரால் நழுவ முடியாது. 50 ஓவர் கிரிக்கெட் டி20 ஃபார்மெட்டின் நீட்டிப்பு என்றால், சூரியாகுமார் தான் இந்தியாவின் நம்பர் 5 வீரராக இருக்க வேண்டும். ராகுல் அல்ல.

கவுகாத்தியில் இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராகுல் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 39 ரன்கள் எடுத்தார். அவரால் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 41வது ஓவரில் கசுன் ரஜிதா மெதுவாக வீசிய பந்து ராகுலின் லெக் ஸ்டும்ப்பை பதம் பார்த்தது. மிக எளிதாக விளையாட வேண்டிய அந்தப் பந்தை ராகுல் கோட்டை விட்டார். அந்த இடத்தில் சூரியகுமார் அல்லது இஷான் கிஷான் இருந்திருந்தால் கதையும் வேறு மாதிரி இருந்திருக்கும். ஸ்கோரும் 373ல் இருந்து 400-க்கு உயர்ந்திருக்கும்.

அடுத்த தளத்தை நோக்கி

ரோகித் தலைமையிலான இந்திய அணி கடந்த ஒரு வருடமாக ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஜொலிக்க முக்கிய காரணமாக சூரியகுமார் இருக்கிறார். இந்தியாவின் ஒரே மிஸ்டர் 360 ஆன அவரின் பேட்டிங் பாணி ஒருநாள் போட்டிகளில் நம்பர் 5 இடத்தில் மிகக் கச்சிதமாக பொருந்துகிறது. டாப் ஆடரில் ரோகித், கில், விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய நான்கு வீரர்களுடன் சூரியகுமார் இணையும் போது அணிக்கு அசுர பலம் கிடைக்கிறது. எதிரணியின் பந்துவீச்சை தும்சம் செய்யவும், ஆட்டத்தில் திருப்புமுனையைக் கொண்டு வரவும் இவரால் முடியும். தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரைப் பற்றி குறிப்பிடத்தைப் போல, களத்தை எளிதாகக் கையாளவும், ஃபீல்டிங் செய்யபவர்களுக்கு இடையேயுள்ள அந்த கேப்பை பயன்படுத்தி பவுண்டரிகளை விரட்டவும் அவரால் முடியும்.

இந்த நிலையைப் பார்ப்பதற்கான மற்றொரு வழி, பேட்டிங் சரிவை உறிஞ்சுவதற்கு இந்தியா ராகுலை ஒரு கடற்பாசியாகப் பார்க்கிறதா? என்று யோசிப்பது தான். அவர் சிறந்த ஃபார்மில் இல்லாவிட்டாலும், அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரர். தவிர இஷான் கிஷனை விட அந்த ரோலில் விளையட கண கச்சிதமானவரும் அவரே. ஆனால், இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கருத்தில் கொண்டு, அவர் கழற்றி விடப்படுவதை ஆய்வு செய்ய முடியாது. அவரது கடந்தகால ஆட்டங்கள் தான் அவருக்கு தற்போது அந்த ரோலை வழங்கியிருக்கின்றன. மேலும் அவர் தனது போட்டியாளர்களிடமிருந்து வரும் அழுத்தத்தை எதிர்க்க வேண்டும் என்றால், அவர் தனது பேட்டிங்கில் உச்ச நிலையை அடைய கட்டாயம் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

தன் மீதான அழுத்தத்தை திடீரென உணரக்கூடிய இரண்டாவது இந்திய வீரராக கில் இருக்கிறார். இஷான் கிஷன் உள்ளே வர மற்றும் ராகுல் லெவனில் இருக்க முதலில் வெளியேற்றப்படும் வீரராக கில் தான் இருப்பார். மேலும், ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ஸ்கோர் செய்து கில் தோல்வியுற்றால், இஷான் கிஷன் மீண்டும் கில்லுக்கு பதில் இடம் பிடிப்பார். எனவே, இருவரும் சொதப்பல் ஆட்டத்தை மீண்டும் தொடரக் கூடாது.

குறிப்பாக, இந்தியாவில் இவ்வளவு பெரிய ஸ்கோர் வழக்கமாக குவிக்கப்படும்போது, இந்திய அணி தானாகவே தங்களின் லட்சியத்தை நிர்ணயிப்பதற்கான சரியான இலக்கை அளவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். அல்லது அந்த இமலாய ஸ்கோரைத் துரத்துவதற்கு தங்களை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் நிச்சயமாக இருக்கும். ஆதலால், அவர்கள் உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் தொடர்ந்து முன்னேற வேண்டுமானால், அணியில் உள்ள எந்தவொரு வீரரும் பலவீனமாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Sports Indian Cricket Team Kl Rahul Indian Cricket Suryakumar Yadav
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment