Rahul Tripathi tamil news: இந்தியா வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நேற்றுடன் நிறைவடைந்த 3 போட்டிகள் டி20 தொடரில், இந்தியாவும் இலங்கையும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று இரவு நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் 112 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 137 ரன்களில் சுருண்டது. இதனால், இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
திரும்பிப் பார்க்க வைத்த திரிபாதி: அந்த சிக்ஸ் வேற லெவல்
இந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் – சுப்மான் கில் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், இஷான் கிஷன் ஒரு ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடினர். இந்த ஃபார்மெட்டில் இந்தியாவுக்கு நீண்ட காலமாக கிடைக்காத அந்த தொடக்கத்தை 3வது வீரராக களமிறங்கிய திரிபாதி கொடுத்தார். 16 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும், திரிபாதியின் அதிரடியான ஆட்டம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக, அவர் அடித்து நொறுக்கி ஷாட்கள் மைதானத்தை நிரம்பி இருந்த ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. சாமிக்க கருணாரத்னே வீசிய பந்தை எதிர்கொண்ட திரிபாதி, அதை ஸ்ட்ரைட் திசையில் சிக்சருக்கு பறக்கவிட்டு மிரட்டினார். அந்த ஷாட்டின் போது அவர் ஸ்டைலாக மட்டையைச் சுழற்றி இருந்தார்.
.
அப்படி திரிபாதி ஸ்டைலாக சிக்ஸர் விளாசிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

While #Gill is struggling and then @rahultripathi is on fire pic.twitter.com/X8YiiCZ0o9
— Deep Raj Deepakᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ (@DeepRajDeepak1) January 7, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil