மகளுக்காக அவுட் ஆனாரா ரெய்னா? நீங்களே பாருங்க (வீடியோ)

முதலில் அந்தப் பையனுக்கு பந்து வீசி கேட்ச் பிடித்து அப்பீல் செய்த ரெய்னாவுக்கு, அவுட் வழங்கவில்லை அம்பயர் கிரேசியா

raina plays indore cricket with daughter gracia lock down covid 19 182669
raina plays indore cricket with daughter gracia lock down covid 19 182669

நமது விளையாட்டுச் செய்திகளில் நாம் தினமும் புலம்புவது ஐபிஎல் நடக்காமல் போனது பற்றி தான். இந்நேரம்லாம் ஜெகஜோதியாக ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டிருக்க வேண்டும். தோனி பல மாதங்களுக்கு பிறகு களம் திரும்பியதை பார்த்திருக்க வேண்டும். ரெய்னாவும் கூட. ஆனால், இது அனைத்திற்கும் மொத்தமாக ஆப்படித்துவிட்டது கொரோனா.

இந்நிலையில், வீட்டிற்குள்ளாவது கிரிக்கெட் விளையாடி மனதை தேற்றிக் கொள்வோமே என நினைத்தாரோ என்னவோ, குடும்பத்துடன் இன்டோர் கிரிக்கெட் விளையாடி ரசித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.

“கண்ணாடிய திருப்பல; ஆட்டோ ஓடல” – ஆஸி., அணி சரிவுக்கு மைக்கேல் கிளார்க்கின் அரிய கண்டுபிடிப்பு

சுரேஷ் ரெய்னா, மகள் கிரேசியா மற்றும் இன்னொரு குட்டிப் பையன் என மூவரும் கிரிக்கெட் விளையாடி இருக்கின்றனர். இதில், கிரேசியாவின் பங்கு அம்பயராக….

முதலில் அந்தப் பையனுக்கு பந்து வீசி கேட்ச் பிடித்து அப்பீல் செய்த ரெய்னாவுக்கு, அவுட் வழங்கவில்லை அம்பயர் கிரேசியா. பிறகு, அந்த பையன் அவுட்டாகி, ரெய்னா பேட்டிங் செய்த போது, அவுட்டே இல்லாத பந்துக்கு, அவுட் கொடுத்து அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்திருக்கிறார் கிரேசியா.

இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டிவிட்டரில் போட்டு உள்ளது. இப்போது இது வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

Pure tit-for-tat gully cricket scenes in the #ChinnaThala household! ???? #SoundOn #WhistlePodu ????????

A post shared by Chennai Super Kings (@chennaiipl) on


ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுவது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்கு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது உள்ள நிலைமையைப் பார்க்கும்போது திட்டமிட்டபடி இவை நடைபெறுமா என்பது சந்தேகம்தான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Raina plays indore cricket with daughter gracia lock down covid 19

Next Story
“கண்ணாடிய திருப்பல; ஆட்டோ ஓடல” – ஆஸி., அணி சரிவுக்கு மைக்கேல் கிளார்க்கின் அரிய கண்டுபிடிப்புmichael clarke says Aussie cricketers ‘sucked up’ to Kohli & Co. to protect IPL deals
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express