Advertisment

தலைமை பயிற்சியாளர் பதவியில் மீண்டும் டிராவிட்? முக்கிய அணி முயற்சி

ஐ.பி.எல் 2025 சீசனுக்கு முன்னதாக தனது இந்திய அணி பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட டிராவிட் இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் முகாமுக்கு தலைமைப் பயிற்சியாளராகத் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajasthan Royals likely to rope in Rahul Dravid as head coach ahead of IPL 2025 Tamil News

டிராவிட் கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆஃப்க்கு தகுதி பெற்றபோது வழிகாட்டியாக இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டவர் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட். இவரது தலைமையிலான இந்திய அணி அண்மையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடருடன் டிராவிட் தனது தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 

Advertisment

இந்த நிலையில், ராகுல் டிராவிட் ஐ.பி.எல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்  தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் 2025 சீசனுக்கு முன்னதாக தனது இந்தியப் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட டிராவிட் இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் முகாமுக்கு தலைமைப் பயிற்சியாளராகத் திரும்புவார் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டிராவிட் இடையே பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராவிட் கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆஃப்க்கு தகுதி பெற்றபோது வழிகாட்டியாக இருந்தார்.  2013 இல் ராயல்ஸ் அணியின் கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட்டார். அவரது தலைமையிலான அணி ஐ.பி.எல்-லில் பிளேஆஃப் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி 20 இன் இறுதிப் போட்டிக்கு சென்றது. 

ஒருவேளை  டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால், குமார் சங்கக்கார என்ன பொறுப்பை வகிப்பார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில் முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்கக்கார ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் இயக்குநராகவும், அந்த அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். 

எஸ்.ஏ20 இல் பார்ல் மற்றும் சிபிஎல்லில் பார்படாஸ் உள்ளிட்ட ராயல்ஸின் மூன்று அணிகளுக்கும் சங்கக்கார தற்போது கிரிக்கெட் இயக்குநராக உள்ளார். 2022 இல் ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு வந்த ராயல்ஸ் 2024 பதிப்பில் இரண்டாவது தகுதிச் சுற்றில் தோல்வியடைந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ipl Cricket Rahul Dravid Rajasthan Royals
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment