மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மார்ச் 17) இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 35.4 ஓவரில் 188 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணியின் மார்ஸ் 65 பந்துகளில் 5 சிக்ஸர் 10 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள்.
இந்திய அணி தரப்பில் முகம்மது ஷமி, முகம்மது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
குல்தீப் யாதவ், பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்துவருகிறது. தற்போது 78 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்துள்ளது.
இந்தியாவின் வெற்றிக்கு 32.3 ஓவரில் 111 ரன்கள் தேவை. இந்த ஆட்டத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேலரியில் அமர்ந்து ரசித்துப் பார்த்தார். அப்போது அவருடன் மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவரும் உடனிருந்தார்.
இந்தப் புகைப்படங்களை மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. மும்பையில் தலைவரின் தரிசனம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/