Khel Ratna Award Announced For Mariappan, Rohit Sharma: பாராலிம்பிக்கில் தங்கம் சென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா உள்ளிட்டோர் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஆகும். அதற்கு அடுத்தபடியாக வீரர்-வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கு தகுதியான வீரர்-வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்கின்றன.
இந்த நிலையில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, ரோஹித் ஷர்மா, மனிகா பத்ரா, வினேஷ் போகத், ராணி ராம்பால் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான்சந்த் விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்தவர் மாரியப்பன் தங்கவேலு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil