Ramanathapuram News in Tamil: ராமநாதபுரம் மாவட்டத்தில் கேலோ இந்தியா திட்ட நிதியுதவிடன் துவக்க நிலை மேசைப்பந்து பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. இதில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வரை சேர்க்கப்பட்டு, தினைரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, மேசைப்பந்து வீரர் அல்லது வீராங்கனை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதற்கான விண்ணப்பம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூயிருப்பதாவது:-
“தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் “விளையாடு இந்தியா” ( Khelo India ) திட்ட நிதியுதவியில் துவக்க நிலை மேசைப்பந்து பயிற்சிக்கான “SDAT – விளையாடு இந்தியா மாவட்டம் மையம்” ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வரை சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினைரி பயிற்சி அளிக்கவுள்ளது.

இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட மேசைப்பந்து வீரர் அல்லது வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவும், தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.25,000 வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.
விளையாடு இந்தியா மாவட்ட மையங்களில் ஆர்வமுள்ள கடந்த சாம்பியன் விளையாட்டு வீரர்களை பயிற்சியாளர்களாக பணிபுரியுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய விண்ணப்பத்தை ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டு 03.03.2023 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு இராமாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்”
இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil