Delhi vs Mumbai: Sarfaraz Khan Tamil News: 88-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் குரூப் – பி-யில் இடம்பிடித்துள்ள டெல்லி – மும்பை அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணியில் 9 பவுண்டரிகளை விரட்டிய தொடக்க வீரர் பிருத்வி ஷா 40 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் சதம் விளாசி மிரட்டினார். தனது அபார ஆட்டத்தை கைவிடாத அவர் 155 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 16 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எனினும், அவரது அசத்தலான ஆட்டம் மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென உயர உதவியது. இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி 293 ரன்கள் குவித்தது.
Hundred and counting! 💯
— BCCI Domestic (@BCCIdomestic) January 17, 2023
Yet another impressive knock from Sarfaraz Khan 👏👏
Follow the Match ▶️ https://t.co/sV1If1IQmA#RanjiTrophy | #DELvMUM | @mastercardindia pic.twitter.com/GIRosM7l14
டெல்லி அணி தரப்பில், பிரஞ்சு விஜயரன் 4 விக்கெட்டுகளையும், யோகேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளையும், திவிஜ் மெஹ்ரா மற்றும் ஹிருத்திக் ஷோக்கீன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இத்துடன் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. நாளை ஆட்ட நேரத்தில் டெல்லி அணி பேட்டிங் செய்ய களமிறங்கும்.
2019 முதல் ரஞ்சி கோப்பையில் சர்பராஸ் கான் குவித்த ரன்கள்:
71, 36, 301, 226, 25, 78, 177, 6, 275, 63, 48, 165, 153, 40, 59, 134, 45, 5, 126*, 75, 20, 111 *, 28*, 125.

முன்னதாக, டெல்லியின் கேப்டன் யாஷ் துல் காய்ச்சலால் காரணமாக நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ஹிம்மத் சிங் கேப்டனாக செயல்படுகிறார். இதுவரை நடந்த போட்டியில் முன்னணி ரன் குவித்த வீரராக இருக்கும் துருவ் ஷோரே ஆட்டத்திற்கு முன்னதாக துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் ஐந்து ஆட்டங்களுக்குப் பிறகு, 8 அணிகள் இடம்பிடித்துள்ள குழுவில் டெல்லி 7வது இடத்தில் உள்ளது. அந்த அணி கால்இறுதிக்கு முன்னேறுவது சந்தேகம் தான்.
மறுபுறம், மும்பை ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் போட்டிக்குள் களமாடியது. புள்ளிப்பட்டியலில் சவுராஷ்டிராவை விட மூன்று இடங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அசாமுக்கு எதிரான இன்னிங்ஸ் வெற்றி மும்பை அணிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“