Ranji Trophy | Rinku Singh: ரஞ்சி டிராபி என்பது மிகப் பெரிய போட்டி அல்ல. ஆனால் விளிம்பில் இருப்பவர்களுக்கும், உழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கும் இது பலனளிக்கும்.
குல்தீப் யாதவ்: டெஸ்டில் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் வரிசை கட்டி இருப்பதால், இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் சிவப்பு பந்தில் தனது மேஜிக்கைப் பயன்படுத்த முடியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய மண்ணில் நடைபெற உள்ள நிலையில், இந்த ரஞ்சி சீசனில் நல்ல தொடக்கம் அவருக்கு கிடைத்தால் அது அவருக்கான கதவைத் திறக்கும்.
வாஷிங்டன் சுந்தர்: கடந்த ஆண்டு காயங்கள் மற்றும் அலட்சியமான ஃபார்ம் காரணமாக போராடினார். அதாவது அவர் தேசிய அணியிலும் வெளியேயும் இருந்தார். ஆல்ரவுண்ட் பேலன்ஸ் வழங்கும் திறன் கொண்ட, வாஷிங்டன் தனது ஃபார்மை மீட்டெடுத்தால், பன்முக வீரர்கள் குறைவாக இருக்கும் இந்திய அணிக்கு கூடுதல் மதிப்பை கொடுப்பவராக இருப்பார்.
ரஜத் படிதார்: நீண்ட கால காயம் காரணமாக அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பின்னடைவை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேசத்திற்காக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், சுப்மான் கில் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் தொடர்ந்து போராடினால், அவரும் அணிக்குள் வரலாம்.
சர்ஃபராஸ் கான்: மிகவும் நிலையான ஆட்டக்காரராக இருந்தும், வேகப்பந்து வீச்சாளர்களைக் கையாளும் திறன் குறித்து கேள்விகள் இன்னும் கேட்கப்படுவதால், தேசிய அளவில் வெற்றி பெறத் தவறிவிட்டார். அவர் பெரும்பாலும் 5வது இடத்தில் பேட் செய்கிறார் - இது அவரை பழைய பந்தை எதிர்கொள்ள அனுமதிக்கிறது. அவர் அதிகமாக பேட்டிங் செய்து தனது திறமையை நிரூபிக்க முடியுமா? என்கிற விவாதம் அடிக்கடி அவருக்கு எதிராக நடத்தப்படுகிறது.
அபிமன்யு ஈஸ்வரன்: ரஞ்சி மற்றும் இந்தியா ஏ சுற்றுகளில் தொடர்ந்து தன்னை நிரூபித்த போதிலும் தவிர்க்கப்பட்டு வருகிறார். முக்கிய கேம்களில், குறிப்பாக நாக் அவுட்களில், அவர் இதுவரை சதம் அடிக்கவில்லை. அதனை மாற்ற இதுவே நல்ல நேரமாக இருக்கும்.
ரிங்கு சிங்: டி20 போட்டிகளில் தனது வலிமையை வெளிப்படுத்தியுள்ள ரிங்கு ஆரோக்கியமான எஃப்.சி சராசரி 57.82 உடன், இடது கை ஆட்டக்காரர் உ.பி.க்காக தொடர்ந்து ஸ்கோர் செய்தால் டெஸ்ட் தொப்பியைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவரும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பது அவரை ஆர்வமுள்ள வீரராக மாற்றியுள்ளது.
அவேஷ் கான்: ஐந்து பேக்-டு-பேக் டெஸ்ட்கள் வரவிருக்கும் நிலையில், இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளர்களை சுழற்ற வேண்டும். மத்திய பிரதேச சீமரான அவேஷ் கான் வொர்க்ஹார்ஸ் என்று அறியப்படுகிறார். மேலும் அவர் நீண்ட ஸ்பெல்களை வீசுவது மட்டுமல்லாமல், பந்தை ரிவர்ஸ் செய்வதிலும் வல்லவர். இந்த வருடத்தின் ஒரு கட்டத்தில் அவர் நிச்சயம் அணிக்கு தேவைப்படுவார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“