Ranji Trophy 2022-23, Delhi vs Tamil Nadu, Elite Group B match updates in tamil: 88-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு – டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் கடந்த 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி முதல் இன்னிங்சில் 303 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தமிழக அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பின்னர், நேற்று 3வது நாள் ஆட்டத்தில் விஜய் சங்கர் (17 ரன்) – பிரதோஷ் ரஞ்சன் பால் (3 ரன்) ஜோடி களமாடினர். இந்த ஜோடியில் இடது கை ஆட்டக்காரரான ரஞ்சன் பால் நிலைத்து நின்று ஆடினார். மேலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 212 பந்துகளில் 16 பவுண்டரிகளை விரட்டி 124 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 22 வயதான ரஞ்சன் பால் முதல்தர கிரிக்கெட்டில் அடித்த முதல் சதம் இதுவாகும்.
தமிழக அணியில் விஜய் சங்கர் 52 ரன்களும், அஸ்வின் கிறிஸ்ட் 32 ரன்களும் எடுத்தனர். இறுதியில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 116 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 427 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. 124 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய டெல்லி அணி நேற்றைய நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்தது.
கடைசி நாள் ஆட்டம்… வெற்றி யாருக்கு?
இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், டெல்லி அணி 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக வைபவ் ராவல் 95 ரன்களும், தொடக்க வீரர் துருவ் ஷோரே 70 ரன்களும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் மற்றும் சந்தீப் வாரியர் தலா 2 விக்கெட்டுகளையும், லட்சுமிநாராயணன் விக்னேஷ் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணிக்கு வெற்றி இலக்காக 139 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாய் சுதர்சன் (24) - என் ஜெகதீசன் (18) ஆகியோர் கொண்ட தொடக்க ஜோடியை இழந்துள்ள தமிழக அணி வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.
தற்போது மைதானத்தில் போதிய வெளிச்சம் இன்மையால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழக அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 86 ரன்கள் தேவை.
சரியாக 5 மணியளவில், மைதானத்தில் போதிய வெளிச்சம் இன்மையால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. அப்போதைய நிலவரப்படி, தமிழக அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து இருந்தது. அணியின் வெற்றிக்கு 86 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த ஆட்டத்தில் தமிழக அணி வெற்றியை ருசிக்க நெருங்கிய நிலையில், மைதானத்தில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி டை ஆனதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தமிழ்நாடு அணிக்கு 3 புள்ளிகளும், டெல்லி அணிக்கு 1 புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. ஆட்ட நாயகன் விருதை தமிழக அணியின் பிரதோஷ் ரஞ்சன் பால் தட்டிச் சென்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil