Advertisment

யு-19 இந்திய துணை கேப்டனின் கதை, 2 வீரர்களுக்கு கங்குலி அறிவுரை... மேலும் விளையாட்டு செய்திகள் உள்ளே...

அவர்கள் ரஞ்சி போன்ற டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டியில் விளையாடி அதிக ரன்களை எடுக்க வேண்டும். தங்களின் திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டும்.

author-image
WebDesk
Feb 04, 2022 11:58 IST
New Update
யு-19 இந்திய துணை கேப்டனின் கதை, 2 வீரர்களுக்கு கங்குலி அறிவுரை... மேலும் விளையாட்டு செய்திகள் உள்ளே...

மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ்:

Advertisment

அரையிறுதியில் இந்திய இணை

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆர்.போபண்ணா- ஆர்.ராமநாதன் இணை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் ஏ.எர்லர்-செக் குடியரசின் ஜே.வெசெலி இணையை போபண்ணா இணை சந்தித்தது.

அணல் பறந்த ஆட்டத்தில் 7-6 (7-3), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் போபண்ணா இணை வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதியில் பிரான்ஸை சேர்ந்த

ரிபெளல்-டெளம்பியா இணையை போபாண்ணா-ராமநாத் இணை சந்திக்கிறது.

மற்றொரு காலிறுதியில் எதிரணியினர் விலகியதால் வி.வர்தன்-என்பாலாஜி இணை அரையிறுதிக்கு சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

பிப்ரவரி 4ம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இணையை பாலாஜி இணை சந்திக்கிறது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 3-6, 2-6 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் ஸ்டெஃபனோவிடம் தோல்வியைத் தழுவினர்.

ஆப்பிரிக்கா கப் ஆஃப் நேஷன்ஸ்:

ஃபைனலில் செனகல் கால்பந்து அணி

ஆப்பிரிக்கா கப் ஆஃப் நேஷன்ஸ் கால்பந்து போட்டியின் ஃபைனலுக்கு செனகல் அணி சென்றது.

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பர்கினா ஃபஸோ அணியை செனகல் அணி எதிர்கொண்டது.

விறுவிறப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பம் முதலே செனகல் அணி ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. பர்கினா அணியும் செனகலை கோல் பதிவு செய்ய விடாமல் பந்தை தடுத்து வந்தது.

பின்னர் சூடுபிடித்த இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரண்டு கோல்களை பதிவு செய்தது செனகல். அதைத் தொடர்ந்து போராடி ஒரு பதில் கோலை பர்கினா அணி பதிவு செய்தது. இருப்பினும் 2-1 என்ற கணக்கில் அந்த அணி பின்தங்கியிருந்தது. ஆட்ட நேர முடிவில் 87ஆவது நிமிடத்தில் செனகல் அணியின் சாடியோ மனே ஒரு கோலை பதிவு செய்தார்.

இதையடுத்து அந்த அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில்

3 விளையாட்டு சேர்ப்பு: ஐஓசி ஒப்புதல்

உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவாக ஒலிம்பிக் போட்டி கருதப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்து 2024இல் பாரீஸில் நடைபெறவுள்ளது.

அதற்கு அடுத்து 2028 இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் நகர்ப்புற விளையாட்டுகளான ஸ்போர்ட் கிளைம்பிங் (பாறை ஏறுதல் போன்ற விளையாட்டு), ஸ்கேட்போர்டிங் (காலில் சக்கரப் பலகை அணிந்து விளையாடுவது), சர்ஃபிங் (அலைச்சறுக்கு) ஆகிய விளையாட்டுகளை சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அனுமதி அளித்தது.

இளைஞர்கள் கவர்ந்திழுக்கும் வகையில் இந்த விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுங்கள்:

2 சீனியர் வீரர்களுக்கு கங்குலி அறிவுரை

டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சோபிக்காத இந்திய அணியின் மூத்த வீரர்களான சதேஸ்வர் புஜாரா, அஜிங்ய ரஹானே ஆகியோர் ரஞ்சி கிரிக்கெட்டில் தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கங்குலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரஹானேவும், புஜாராவும் சிறந்த வீரர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல முறை விளையாடியுள்ளனர். அவர்கள் ரஞ்சி போன்ற டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டியில் விளையாடி அதிக ரன்களை எடுக்க வேண்டும். தங்களின் திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டும். பல சர்வதேச போட்டிகளில் விளையாடிவிட்டதால் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாட அவர்கள் தயங்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். நாங்கள் அனைவருமே ரஞ்சியில் விளையாடியிருக்கிறோம். எனவே அது அவர்களுக்கு பிரச்சனையாக இருக்காது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஒரு சதம் கூட பதிவு செய்யவில்லை.

மார்ச் மாதம் இந்தியா-இலங்கை இடையே நடைபெறவுள்ள 2 டெஸ்ட் கொண்ட தொடரில் இரு வீரர்களும் இடம்பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பல போராட்டங்களை கடந்து வந்த

யு-19 இந்திய துணை கேப்டனின் கதை

வெயில், மழை, புழுதி எந்த இடையூறு இருந்தாலும் ஆந்திர மாநிலம், குண்டூரில் இருந்து மங்கல்கிரியில் உள்ள பயிற்சி மையத்துக்கு யு-19 இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷேக் ரஷீத் சென்று விடுவார்.

அவரை அழைத்துச் சென்று திரும்புவது அவரது தந்தை ஷேக் பலிஷா.

ஒரு கட்டத்தில் ரஷீதின் தந்தை வேலையை இழக்க நேரிட்டபோது கஷ்டத்தை எதிர்கொண்டாலும் கிரிக்கெட் கனவை மட்டும் அவர் தொடர்ந்து கைவிடாமல் முன்னெடுத்துச் சென்றார்.

அதன் பலனை யு-19 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் அறுவடை செய்தார் ரஷீத்.

ரஷீதும், கேப்டன் யஷ் துல்லும் அணியின் ஸ்கோரை உயர்த்த காரணமாக இருந்தவர்கள்.

தொடக்க ஆட்டத்தில் மளமளவென விக்கெட் சரிய, ரஷீத் மட்டும் நின்று ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளித்தார்.

அந்த ஆட்டத்தில் ரஷீத் எடுத்த 94 ரன்களுக்கு வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

படத்துக்கு போகனும், பார்க் போகனும், இந்த போன் வேணும் அப்டினு எதுவுமே எங்கிட்ட என் மகன் கேட்டது இல்லை. அவருக்கு எல்லாமே கிரிக்கெட் தான் என்று கூறுகிறார் ரஷீதின் தந்தை பலிஷா.

#Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment