Hardik Pandya | BCCI: இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் சில வீரர்கள் மார்ச் 22 ஆம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் ஐ.பி.எல் 2024 தொடருக்கான பயிற்சியில் இப்போதே இறங்கி விட்டார்கள். அதனால், காயம் அடைந்த மற்றும் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திற்கான சிகிச்சை எடுத்தும் வரும் வீரர்களைத் தவிர, மற்ற இந்திய அணி வீரர்களுக்கு ரஞ்சி கோப்பை பங்கேற்பை கட்டாயமாக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) விரும்புகிறது.
இந்திய வீரர்களில் ரஞ்சி கோப்பையில் தனது மாநில அணியான ஜார்கண்டிற்காக விளையாடுவதை விட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷான் தனிப்பட்ட பயிற்சி அமர்வுகளில் ஈடுபட்டுள்ளார். இதனால், இஷான் கிஷான், க்ருனால் பாண்டியா மற்றும் தீபக் சாஹர் போன்ற வீரர்கள் சிவப்பு பந்து (ரெட்-பால்) போட்டிகளில் விளையாட வேண்டும் என பி.சி.சி.ஐ விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், தனிப்பட்ட பயிற்சி அமர்வுகளில் கவனம் செலுத்தும் ஹர்திக் பாண்டியாவுக்கு இன்னும் அத்தகைய உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை.
ஹர்திக் இந்த விதிவிலக்கு பெறுவதற்கான காரணம் குறித்து பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவரிடம் கேட்கப்பட்டபோது, அவரது காயம் மற்றும் சிவப்பு பந்து கிரிக்கெட் போட்டிக்கான அவரது உடற்தகுதியைக் குறிப்பிட்டுள்ளார்.
"ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் காயத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அவரது உடல் சிவப்பு-பந்து கிரிக்கெட்டின் கடுமையை ஏற்றுக்கொள்ள முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டின் பணிச்சுமையை அவரால் தாங்க முடியாது. மேலும் ஐ.சி.சி போட்டிகளுக்கு இந்திய அணிக்கு அவர் தேவைப்படுகிறார்" என்று அந்த நிர்வாகி கூறியுள்ளார்.
சில வீரர்கள் ரெட்-பால் கிரிக்கெட்டை விட ஐ.பி.எல்லை விரும்புவதைக் கண்டு பி.சி.சி.ஐ உயர் அதிகாரிகள் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, ஐ.பி.எல்.லில் பங்கேற்பதற்கு 3-4 ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடுவது கட்டாயமாக்கப்படும் என்று வாரியம் முடிவு எடுக்க ஆலோசிக்கப்படுகிறது.
"சில வீரர்கள் சிவப்பு-பந்து கிரிக்கெட்டை விளையாட விரும்பவில்லை என்பதை பி.சி.சி.ஐ-யில் முடிவெடுப்பவர்கள் நன்கு அறிவார்கள். மற்ற சில வீரர்கள், நீங்கள் அவர்களை அழைக்கும் போதெல்லாம், அவர்கள் தற்போது பிசியோ பயிற்சியில் இருக்கிறோம் என்று கூறுவார்கள். இது நிறுத்தப்பட வேண்டும்," என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“