Advertisment

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... சேப்பாக்கத்தில் நடக்கும் ரஞ்சி போட்டியை நேரில் இலவசமாக பார்க்கலாம்!

ரஞ்சி கோப்பை தொடரில் நாளை முதல் தொடங்கும் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதும் போட்டியை ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டு களிக்கலாம் என தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Ranji Trophy Tamil nadu vs Karnataka free to watch match in Chepauk Stadium TNCA announce Tamil News

நடப்பு ரஞ்சி கோப்பை சீசனில் தமிழ்நாடு அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamilnadu Cricket Association | Ranji Trophy: 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில், எலைட் பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

Advertisment

இந்நிலையில், எலைட் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி அதன் 6-வது லீக் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்கொள்கிறது. 

நாளை முதல் தொடங்கும் இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலை 9:30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. 

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி 

இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. அது என்னவென்றால், ரஞ்சி கோப்பை தொடரில் நாளை முதல் தொடங்கும் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதும் போட்டியை ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டு களிக்கலாம் என தெரிவித்துள்ளது. சி,ஈ, டி, லோவர் ஸ்டாண்ட்டுகளில் ரசிகர்கள் போட்டியை கண்டு ரசிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. 

நடப்பு ரஞ்சி கோப்பை சீசனில் தமிழ்நாடு அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

எலைட் குரூப் "சி" பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி 21 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியில் முதலிடம் வகிக்கிறது. கர்நாடகா 2-வது இடத்திலும் திரிபுரா 3-வது இடத்திலும் குஜராத் 4-வது இடத்திலும் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamilnadu Cricket Association Ranji Trophy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment