Advertisment

ரன்வீர் முதல் த்ரிஷா வரை… சி.எஸ்.கே-வின் வெற்றியை கொண்டாடி தீர்த்த திரை பிரபலங்கள்!

ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள சென்னை அணிக்கு திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

author-image
WebDesk
May 30, 2023 12:55 IST
Ranveer Singh to Trisha, celebs wishes to CSK and MS DHONI for winning IPL trophy for 5th time Tamil News

Chennai Super Kings winIPL trophy for 5th time

Chennai Super Kings won IPL 2023 as they beat Gujarat Titans - Ranveer Singh, Trisha and celebrities congratulate Tamil News: 16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் குஜராத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எல்லா தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

Advertisment

இந்த நிலையில், ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள சென்னை அணிக்கு திரை பிரபலங்களான ரன்வீர் சிங், விக்னேஷ் சிவன், அனிருத் ரவிச்சந்தர், த்ரிஷா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக ரன்வீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே, ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்எஸ் தோனி உற்சாகப்படுத்தும் விதமாக வரிசையாக டிவீட்களை பதிவிட்டுள்ளார்.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Cricket #Sports #Ms Dhoni #Chennai Super Kings #Gujarat Titans #Ipl Finals #Ipl News #Ipl Cricket #Ipl #Ravindra Jadeja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment