worldcup 2023 | Pakistan vs Afghanistan | rashid-khan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று திங்கள்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 58 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து 283 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 49 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது.
அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 65 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 87 ரன்களும் எடுத்தார். கடைசி வரை களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ரஹ்மத் ஷா 77 ரன்களும், கேப்டன் ஹெஷ்மத்துல்லா ஷாஹிதி 48 ரன்களும் எடுத்தனர். இறுதியில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.
வீடியோ வைரல்
இந்நிலையில், இந்த வெற்றிக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதானுடன் இணைந்து நடனமாடி வெற்றியை கொண்டாடினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பதிவிட்டப்பட்ட நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்ட தற்போது வைரலாகி வருகிறது.
Irfan Pathan dancing with Rashid Khan.
— Johns. (@CricCrazyJohns) October 23, 2023
- Video of the day from Chepauk...!!!pic.twitter.com/ijoMGqKht1
This is the winning moment of Afghanistan. The cricket loving chennai chepauk crowd were in elements - yet again. Pakistan's fielding was nothing less than a self troll. Respect to Afghanistan - they were no less than the current syria/Palestine few years before #AFGvPAK #CWC23 pic.twitter.com/ux3bYHeW0w
— Nagappan Subramanian (@NagappanSubram3) October 23, 2023
பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள ஆப்கானிஸ்தான் (-0.969) அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2ல் வெற்றி 3ல் தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. -0.400 நெட் ரன்ரேட்டுடன் பாகிஸ்தான் 5வது இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.