/tamil-ie/media/media_files/uploads/2018/12/a8.jpg)
Cricket,MS Dhoni,Rashid khan,MS Dhoni helicopter shot,Rashid khan helicopter shot,T10 Cricket League,T10 league
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்டை வீடியோ பதிவாக தோனிக்கு பதிவிட்டிருக்கிறார்.
19 வயதாகும் ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷித் கான், துபாயில் நடைபெறும் T10 லீகில் , மராதா அரேபியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், சிந்தீஸ் அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் தல தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அச்சு அசலாக அடித்து அதகளப்படுத்தி இருக்கிறார் ரஷித் கான்.
அதனை அவரே தோனியின் ட்விட்டர் பக்கத்திற்கு டேக் செய்தும் வெளியிட்டுள்ளார். அதில், "ஹெலிகாப்டர் ஷாட் கண்டுபிடிப்பாளரே... சகோதரர் தோனி" என்று பதிவிட்டுள்ளார்.
???????????????????????? #Helicopters#Inventer@msdhoni Bhai ???????????????????????? @T10League@MarathaArabianspic.twitter.com/DH8RdfUnYA
— Rashid Khan (@rashidkhan_19) November 29, 2018
ரஷித் கானின் இந்த ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு இந்திய வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.