worldcup 2023 | pakistan-vs-afghanistan | rashid-khan | ratan-tata: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறிய 22-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வரலாறு படைத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகை அறிவித்ததாக வெளியாக தகவலை தொழிலதிபர் ரத்தன் டாடா முற்றிலுமாக மறுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பெற்ற பிறகு, இந்தியக் கொடியை காட்டியதற்காக ரஷித் கானுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அபராதம் விதித்ததை அடுத்து, டாடா குழுமத்தின் தலைவரான தொழிலதிபர் ரத்தன் டாடா அவருக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகை வழங்க உறுதியளித்துள்ளார் என்கிற தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவியது.
ஆப்கானிஸ்தான் வீரருக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா உதவுவதாக பல பயனர்கள் முன்பு கூறியிருந்தனர். "பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் போது தனது மார்பில் இந்திய தேசிய கொடியைத் துணிச்சலாகக் காட்டியதற்காக ஐ.சி.சி-யால் ரூ. 55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ரஷித் கானுக்கு நிதியுதவி அளித்த ஸ்ரீ ரத்தன் டாடாவை நான் வாழ்த்துகிறேன்" என்று ஒரு பயனர் அக்டோபர் 27 அன்று பதிவிட்டு இருந்தார்.
இதேபோல், மற்றொரு பயனர்,"இந்தியக் கொடியுடன் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ரசித் கானுக்கு எதிராக ஐசிசி-யிடம் பாகிஸ்தான் புகார் அளித்தது. ஐசிசி ரசித் கானுக்கு 55 லட்சம் அபராதம் விதித்தது. ஆனால் ரத்தன் டாடா ரசித் கானுக்கு 10 கோடி அறிவித்தார்." என்று பதிவிட்டார்.
ரத்தன் டாடா பதிவு
இந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ள தொழிலதிபர் ரத்தன் டாடா தனக்கும் கிரிக்கெட்டுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், மக்கள் வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் வெகுமதி வழங்குவது பற்றி ஐ.சி.சி அல்லது எந்த கிரிக்கெட் கவுன்சிலுக்கும் நான் பரிந்துரை செய்யவில்லை. எனக்கு கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லை. எனது அதிகாரப்பூர்வ தளங்களை தவிர்த்து வரும் வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் மற்றும் வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம்." என்று தொழிலதிபர் ரத்தன் டாடா பதிவிட்டுள்ளார்.
I have made no suggestions to the ICC or any cricket faculty about any cricket member regarding a fine or reward to any players.
— Ratan N. Tata (@RNTata2000) October 30, 2023
I have no connection to cricket whatsoever
Please do not believe WhatsApp forwards and videos of such nature unless they come from my official…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.