Ravi Shastri - India vs Australia Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்றிரவு நடந்தது. இதில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் ராகுல் 55 ரன்கள் எடுத்தார். இதேபோல், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்த ஹர்திக் பாண்ட்யா 71 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் எலிஸ் 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
𝗬𝗼𝘂 𝗝𝘂𝘀𝘁 𝗖𝗮𝗻 𝗡𝗼𝘁 𝗠𝗶𝘀𝘀 𝗧𝗵𝗶𝘀! @hardikpandya7 creamed 7⃣ Fours & 5⃣ Sixes to hammer 7⃣1⃣* off 3⃣0⃣ balls! ⚡️ 🎇 #TeamIndia | #INDvAUS
Watch that stunning knock 🔽https://t.co/C1suCKBPK7 pic.twitter.com/3o86bZEIzn— BCCI (@BCCI) September 20, 2022
தொடர்ந்து இந்தியா நிர்ணயித்த இமாலய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதனால், அந்த அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 61 ரன்களும், மேத்யூ வேட் 45 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த அசத்தல் வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 23-ந்தேதி நாக்பூரில் நடக்கிறது.
Things went right down to the wire but it's Australia who won the first #INDvAUS T20I.#TeamIndia will look to bounce back in the second T20I.
Scorecard 👉 https://t.co/ZYG17eC71l pic.twitter.com/PvxtKxhpav— BCCI (@BCCI) September 20, 2022
இந்திய அணியை விளாசிய ரவி சாஸ்திரி
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் மோசமான பீல்டிங் தான். குறிப்பாக இரண்டு முக்கிய கேட்ச்களை அனுப்பமுள்ள இந்திய வீரர்கள் கோட்டை விட்டார்கள். ஆஸ்திரேலிய தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 42 ரன்கள் எடுத்திருந்த போது அக்ஷர் பட்டேல் வசம் கேட்ச் கொடுத்தார். ஆனால், படேல் அதை கோட்டை விட்டு ஏமாற்றினார்.
இதேபோல், ஸ்டீவன் ஸ்மித் 19 ரன்கள் எடுத்த நிலையில் இருந்த போது, ராகுல் ஈஸி கேட்ச் கொடுத்தார். ஆனால் ராகுல் அதை கோட்டை விட்டார். இந்த வீரர்களில் அரைசதம் அடித்த கேமரூன் கிரீன் 61 ரன்னில் தான் அவுட் ஆனார். அதேபோல், ஸ்டீவன் ஸ்மித் 35 ரன்னில் தான் ஆட்டமிழந்தார்.
இந்தியாவுக்கு எதிராக கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்து வந்த மேத்யூ வேட் 23 ரன்னில், ஹர்ஷல் பட்டேல் வசம் கேட்ச் கொடுத்தார். சற்று கடினமான அந்த கேட்ச்சை கோட்டை விட்டார் ஹர்ஷல் பட்டேல். இப்படி, படு சொதப்பலை வெளிப்படுத்தி மோசமான பீல்டிங் செய்த இந்திய அணியினரை ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, இந்திய வீரர்கள் பீல்டிங் செய்த விதம் குறித்து விளாசியுள்ளார்.
பொதுவாக இந்திய அணியின் செயல்திறனை அதிகம் விமர்சிக்காத ரவி சாஸ்திரி, அணியின் பீல்டிங்கின் தரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதை "கவனக்குறைவான, முறையற்ற; மிகவும் சாதாரணமானது" என்று அழைத்துள்ளார். மேலும் இந்தியா முன்னேறும் முன்னணி அணிகளை முறியடிக்க வேண்டுமானால் ஏதாவது கடுமையாக மாற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் .
முதல் டி20 போட்டியின் போது பேசிய ரவி சாஸ்திரி, "பல வருடங்களில் முன்னணி இந்திய அணிகள் அனைத்தையும் பார்த்தால், இளமையும் அனுபவமும் இருக்கிறது. அந்த இளைஞர்கள் இங்கு காணவில்லை, அதனால் மோசமான பீல்டிங்கையும் நான் காண்கிறேன். கடந்த ஐந்து-ஆறு வருடங்களாக, பீல்டிங் வாரியாகப் பார்த்தால், இந்த அணி, முன்பு இருந்த எந்த முன்னணி அணியுடனும் பொருந்தாது.
ஃபீல்டிங்கில் இப்படி கோட்டை விடுவது பெரிய போட்டிகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதாவது ஒரு பேட்டிங் அணியாக நீங்கள் ஒரு ஆட்டத்திற்கு பிறகு 15-20 ரன்கள் எடுக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் மைதானத்தை சுற்றிப் பார்த்தால், உங்களது புத்திசாலித்தனம் எங்கே? ஜடேஜா இல்லை. அந்த எக்ஸ்-பேக்ட்டர் எங்கே?.
இன்று நான் ஏமாற்றமடைந்தது ஃபீல்டிங்கின் தரம். அதாவது, அது கவனக்குறைவான, முறையற்ற; மிகவும் சாதாரணமானதாக தெரிகிறது. பெரிய போட்டிகளில் பெரிய அணிகளை வீழ்த்த வேண்டும் என்றால், பீல்டிங்கிற்கு வரும்போது உங்களுக்கு ஒரு பெரிய முன்னேற்றம் தேவை என்று நான் நினைக்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.