விரும்பியதை சாதித்துவிட்டேன்; பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக தயாராகிறார் ரவி சாஸ்திரி

Achieved all I wanted, never overstay your welcome: Shastri gears up for end of India tenure: விரும்பியதை சாதித்துவிட்டேன், ஒருபோதும் வரவேற்பை மீறாதீர்கள்; இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக தயாராகிறார் ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், டி 20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் டி 20 உலக கோப்பையுடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது வருத்தமான முடிவு என்றாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றும், தனது பதவிகாலத்தில் அதிகமாகவே சாதித்துவிட்டேன் என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ரவி சாஸ்திரியின் பயிற்சியாளர் பயணம் 2017ல் தொடங்கியது. 2019 ல் அவர் மீண்டும் பயிற்சியாளராக நீட்டிக்கப்பட்டார். தற்போது, டி 20 உலகக் கோப்பை அக்டோபர் 17 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த உலக கோப்பையுடன் அவரது பதவிகாலம் முடிவடைகிறது.

59 வயதான ரவி சாஸ்திரி, தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளனதால் தனிமைப்படுத்தலில் உள்ளார். ‘தி கார்டியன்’ உடன் பேசிய ரவி சாஸ்திரி, டி 20 உலகக் கோப்பையை வெல்வது சிறப்பானதாக இருக்கும், ஆனால் எனது பதவி காலத்தில் இந்திய அணி ஏற்கனவே சிறப்பான விஷயங்களை செய்துள்ளது என்று கூறினார்.

“நான் விரும்பியதை அடைந்து விட்டேன் என நான் நம்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி ஐந்து ஆண்டுகளாக நம்பர் 1, ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை வெற்றி, இங்கிலாந்தில் வெற்றி.

“நான் இந்த கோடை கால்த்தின் தொடக்கத்தில் மைக்கேல் அதெர்டனிடம் பேசினேன்: ‘ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, கொரோனா காலங்களில் இங்கிலாந்தில் வெற்றி பெறுவது எனக்கு இவை சிறப்பானது. நாங்கள் இங்கிலாந்திடம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றோம், லார்ட்ஸ் மற்றும் ஓவல் மைதானத்தில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பானது, ”என்று ரவி சாஸ்திரி கூறினார்.

மான்செஸ்டரில் நடக்க இருந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கொரோனா காரணமாக ரத்தானதை அடுத்து இந்தியா இங்கிலாந்திற்கு எதிராக 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

ரவி சாஸ்திரியின் காலத்தில், இந்தியா தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக டி 20 தொடர் வெற்றியையும் பதிவு செய்தது.

“வெள்ளை பந்து கிரிக்கெட்டில் உலகின் ஒவ்வொரு நாட்டையும் அவர்கள் சொந்த மண்ணில் வென்றுள்ளோம். நாம் (டி 20) உலகக் கோப்பையை வென்றால், அது சிறப்பானதாக இருக்கும். அதற்கு மேல் எதுவும் இல்லை.

“நான் ஒரு விஷயத்தை நம்புகிறேன்- உங்கள் வரவேற்பை மீறாதீர்கள். நான் சொல்வேன், எனது பதவிகாலத்தில் நான் நினைத்ததை விட  அதிகமாக சாதித்துள்ளேன். ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, கொரோனா காலத்திலும் இங்கிலாந்தில் முன்னிலை பெற்றது, கிரிக்கெட்டில் எனது நான்கு தசாப்தங்களில் இது மிகவும் திருப்திகரமான தருணம். என்று ரவி சாஸ்திரி கூறினார்.

ரவி சாஸ்திரி, இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என  விரும்புவார், ஏனெனில் ரவி சாஸ்திரி-விராட் கோலி காலக் கட்டத்தில் இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை.

“நாங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தப் போகிறோம். எங்கள் திறமைக்கு ஏற்ப விளையாடினால் அணி வெற்றி பெற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அதை அனுபவிக்க போகிறோம். டெஸ்ட் போட்டி அழுத்தத்தை மறந்து விடுங்கள். டி 20 கிரிக்கெட்டை அனுபவிக்க வேண்டும். நான் ஒரு உண்மையான உயரத்தில் வெளியே செல்ல திட்டமிட்டுள்ளேன், ”என்று ரவி சாஸ்திரி வலியுறுத்தினார்.

“ஆமாம், பதவிக்காலம் முடிவடைதில் வருத்தம் இருக்கும், ஏனென்றால் நான் பல சிறந்த வீரர்கள் மற்றும் ஆளுமைகளுடன் பணியாற்றியுள்ளேன். டிரஸ்ஸிங் அறையில் நாங்கள் சில சிறந்த நேரங்களை அனுபவித்தோம். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் கிரிக்கெட்டின் தரம் மற்றும் சவாலான பயணத்தில் நாங்கள் அடைந்த முடிவுகள், சிறப்பானது, ”என்று ரவி சாஸ்திரி கூறினார்.

ஜஸ்பிரித் பும்ரா ரவி சாஸ்திரியின் பதவிகாலத்தில் ஒரு அபாயகரமான டெஸ்ட் பந்துவீச்சாளராக தோன்றியதைப் பற்றியும் அவர் பேசினார்.

ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியும் என்று யாரும் நம்பவில்லை. அவர் ஒரு வெள்ளை பந்து வீச்சாளர். ஆனால் நான் பயிற்சியாளராக பொறுப்பேற்றபோது, ​​என்னை நானே கேட்டுக்கொண்டேன்: ‘எப்படி 20 விக்கெட்டுகளை வெளிநாடுகளில் எடுப்பது?’

நான் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நிறைய டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியதால், அணியில் நான்கு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்று எனக்குத் தெரியும். இது 2018 இல் தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது, அந்த அருமையான தொடரை நாங்கள் 2-1 என்ற கணக்கில் இழந்தோம். கேப் டவுனில் நடந்த முதல் டெஸ்டில் பும்ராவை கட்டவிழ்த்து விட விரும்பினேன்.

“நான் விராட் கோலியிடமும் மற்றும் பல மாதங்களுக்கு முன்பே தேர்வாளர்களிடம் பும்ரா குறித்துச் சொன்னேன்: ‘இந்தியாவில் அவரை கட்டவிழ்த்து விடாதீர்கள். கேப் டவுனுக்கு முன்பு அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகம் பார்க்க நான் விரும்பவில்லை.

“அது மூன்று வருடங்களுக்கு முன்பு. தற்போது வரை பும்ரா 101 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் (24 டெஸ்ட் போட்டிகளில்). ” என்று ரவி சாஸ்திரி கூறினார்.

நிறைய சாதித்துவிட்டேன், ஒருபோதும் வரவேற்பை மீறாதீர்கள்; இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக தயாராகிறார் ரவி சாஸ்திரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ravi shastri interview team india coach to leave after t20 world cup

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express