Advertisment

டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை 'சாதாரணமாக' அறிவித்த தோனி... நெகிழும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி!

Ravi Shastri On How MS Dhoni "Casually" Dropped Test Retirement Tamil News: எம்.எஸ். தோனி தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை மிகச் சாதாரணமாக அறிவித்தார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நெகிழ்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ravi Shastri Tamil News: How MS Dhoni Casually Dropped Test Retirement Shastri reminisced

Ravi Shastri Tamil News: இந்திய கிரிக்கெட் அணிக்கு 2017 முதல் 2021ம் ஆண்டு வரை தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றியவர் ரவி சாஸ்திரி. இவருடைய சிறப்பான வழிகாட்டுதலால் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறப்பாக விளையாடியது. குறிப்பாக, ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டுமுறை டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இங்கிலாந்து மண்ணிலும் அந்த சாதனையை தொடர்ந்தது.

Advertisment

இப்படி அயல்நாட்டு மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இந்தியாவை மாற்றி வைத்த பெருமையை ரவி சாஸ்திரி பெற்றார். எனினும், இவர் வழிகாட்டிய இந்திய அணி ஐசிசி நடத்திய தொடர்களில் கோப்பை வெல்லவில்லை என்பதே இவர் மீது வைக்கப்படும் மிகப்பெரிய விமர்சனமாக உள்ளது.

publive-image
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

முன்னதாக கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வந்த ரவி சாஸ்திரி, 2007 டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்தபோதும், 2011 உலகக் கோப்பையில் மகேந்திரசிங் தோனி 'பினிஷிங் சிக்ஸர்' அடித்து வெற்றிபெற்றுக் கொடுத்தபோதும், இவர்தான் வர்ணனை செய்தார். இந்த சம்பங்களை நாம் நினைவு கூறும்போதெல்லாம் இவரின் பீறிட்டு எழும் காந்த குரலும்தான் வந்து செல்லும்.

publive-image
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

இந்நிலையில், முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தான் இந்திய அணியின் இயக்குநராக இருந்தபோது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சம்பவத்தை சமீபத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

எம்எஸ் தோனி டிசம்பர் 30, 2014 அன்று மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் டிராவின் முடிவில், தான் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்த நிலையில், தோனியின் இந்த முடிவு குறித்து அணியில் யாருக்கும் தெரியாது என்றும், மிகச் சாதாரணமாக அவருடைய ஓய்வை அறிவித்தார் என்றும் ரவி சாஸ்திரி வெளிப்படுத்தியுள்ளார்.

publive-image
ரவி சாஸ்திரி - எம் எஸ் தோனி

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய ரவி சாஸ்திரி, "விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதை அறிந்து தான் தோனி ஓய்வு முடிவை எடுத்தார். அவருக்கு பின் அணியை வழிநடத்தும் வீரர் யார் என்று அவருக்குத் தெரியும். எனவே, அவர் ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடுவதற்கான சரியான நேரத்திற்காக காத்திருந்தார்.

ஏனென்றால், அவரது உடல் எவ்வளவு பணிச்சுமையை தாங்கும் என்று அவருக்குத் தெரியும். ஒயிட்-பந்து விளையாட்டில் தொடர வேண்டும் என விரும்பினார். அவரது உடல் அவரிடம் போதும் என்றால் கூறினால், அது அவருக்கும் போதும். ஆதாலால், அவரைப் பற்றிய இரண்டாவது எண்ணம் எனக்கு இல்லை.

publive-image
ரவி சாஸ்திரி - எம் எஸ் தோனி

மெல்போர்னில், 'நான் டெஸ்ட் கிரிக்கெட்டை முடித்துக்கொள்கிறேன்' என்று தோனி கூறியது எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உண்மையில், அவர் சாதாரணமாக என்னிடம் நடந்து வந்து, 'ரவி பாய், நான் சக வீரர்களிடம் பேச வேண்டும்' என்றார். நான் சரி என்று சொன்னேன். அதனால் அவர் ஏதாவது சொல்வார் என்று நினைத்தேன்; நாங்கள் ஒரு சிறந்த ஆட்டத்தை டிரா செய்தோம், கடைசி நாள் பேட்டிங் செய்தோம், அந்த போட்டியை டிரா செய்வது மிகப்பெரிய விஷயமாக எங்களுக்கு தெரிந்தது.

அன்றைய நாள் தோனி, 'நான் டெஸ்ட் கிரிக்கெட்டை முடித்து கொள்ளப்போகிறேன்' என்று கூறினார். நான் வெளியே வந்து, டிரஸ்ஸிங் ரூமைச் சுற்றியுள்ள முகங்களைப் பார்த்தேன், அவர்களில் பெரும்பாலோர் அதிர்ச்சியில் இருந்தனர். ஆனால், அது தான் எம்.எஸ். தோனி" என்று ரவி சாஸ்திரி நினைவு கூர்ந்துள்ளார்.

publive-image
ரவி சாஸ்திரி - எம் எஸ் தோனி

கடந்த 1981ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான ரவி சாஸ்திரி, 80 டெஸ்ட்களில் 383 ரன்களையும், 150 ஒருநாள் போட்டிகளில் 3108 ரன்களையும் சேர்த்துள்ளார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 206 ரன்கள். பந்துவீச்சில் 280 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் ரவி சாஸ்திரி.

publive-image
ரவி சாஸ்திரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Ms Dhoni Indian Cricket Ravi Shastri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment