Ravi Shastri - WTC Final 2023 Tamil News: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன. இந்திய அணியில் ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரை தான் நம்பி உள்ளது.பந்து வீச்சில் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
Advertisment
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ரவி சாஸ்திரி கருத்து
Advertisment
Advertisements
இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான சிறந்த '12' வீரர்களை இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசுகையில், "நீங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பார்க்கும்போது, கடந்த முறை இந்தியா இறுதிப் போட்டியில் இருந்ததை நான் நினைவில் வைத்தால், அந்த விளையாட்டிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். நீங்கள் நிலைமைகளுக்கு ஏற்ற அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த முறை சவுத்தாம்ப்டனில் வானிலை மிகவும் மேகமூட்டத்துடன் உள்ளது. எனவே எனது சிறந்த 12 வீரர்கள் வரிசை மிகவும் தெளிவாக உள்ளது: ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா 3வது இடத்தில், விராட் கோலி 4வது இடத்தில், அஜிங்க்யா ரஹானே 5வது இடத்தில் உள்ளனர்.
இப்போது விக்கெட் கீப்பர் தேர்வு கே.எஸ்.பாரத் மற்றும் இஷான் கிஷன் இடையே இருக்க வேண்டும். யார் விளையாடுகிறார்கள் என்பதைப் பொறுத்து, இந்தியா மட்டும் செல்லக்கூடும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆனால் 4 சீமர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர் இருந்தால் அது வேறு வழியில் செல்லும். 6வது இடத்தில் ஜடேஜா, 7வது இடத்தில் முகமது ஷமி, 8வது இடத்தில் முகமது சிராஜ், 9வது இடத்தில் ஷர்துல் தாக்கூர். 11வது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் 12வது இடத்தில் உமேஷ் யாதவ் ஆகிய வீரர்கள் இருக்கிறார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil