சென்னையில் 2-வது முறையாக சம்பவம் செய்த அஸ்வின்... 6-வது டெஸ்ட் சதம் அடித்து மிரட்டல்!

வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் ஷாகிப் அல் ஹசன் வீசிய 77.3-வது ஓவரில் ஒரு ரன் எடுத்த அஸ்வின், 108 பந்துகளில் தனது 6வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் ஷாகிப் அல் ஹசன் வீசிய 77.3-வது ஓவரில் ஒரு ரன் எடுத்த அஸ்வின், 108 பந்துகளில் தனது 6வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ravichandran Ashwin 6th Test century on India vs Bangladesh Day 1 CHENNAI Tamil News

இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த, இந்த இக்கட்டான சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் ஜோடி அமைத்தனர்.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் காலை 9:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் வங்கதேசம் டாஸ் வென்று பவுலிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Ravichandran Ashwin notches up 6th Test century on India vs Bangladesh Day 1

இதனையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய களமாடியது. இந்திய அணியின் டாப் ஆடர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா (6), சுப்மன் கில் (0), விராட் கோலி (6) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இவர்களது விக்கெட்டை கைப்பற்றி மிரட்டிய வங்கதேசத்தின் ஹசன் மஹ்மூத் என்கிற 24 வயதான இளம் வீரர், சிறிது நேரம் களத்தில் தாக்குப் பிடித்த ரிஷப் பண்ட் (39) விக்கெட்டையும் வீழ்த்தினார். 

ரிஷப் பண்ட் உடன் பார்ட்னர்ஷிப்பை அமைத்த கே.எல் ராகுல் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதனால், இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இந்த இக்கட்டான சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் ஜோடி அமைத்தனர். இவர்களும் சீக்கிரமே ஆட்டமிழந்து வெளியேறுவார்கள் என வங்கதேசம் கணக்குப் போட்ட நிலையில், 144 ரன்னுக்கு பார்ட்னர்ஷிப்பை அமைத்த அஸ்வின் - ஜடேஜா ஜோடி முதல் நாள் ஆட்டம் முடியும் வரை களத்தில் இருந்தனர். 

Advertisment
Advertisements

இருவரும் தொடக்கத்தில் நிதானமாக மட்டையை சுழற்றி வந்தனர். ஆனால், அடுத்தடுத்த ஓவர்களில் வேகத்தை கூட்டினர். வங்கதேச அணியின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளிய இந்த ஜோடியில் இருவரும் அசத்தலான அரைசதம் அடித்தனர். ஜடேஜா தனது பாணியில் மட்டையை சுழற்றி அரைசதத்தை அறிவிக்கையில், அஸ்வின் 75 ரன்கள் எடுத்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 

இந்த ஆட்டத்தில் ஷாகிப் அல் ஹசன் வீசிய 77.3-வது ஓவரில் ஒரு ரன் எடுத்த அஸ்வின், 108 பந்துகளில் தனது 6வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார். அவரது சொந்த ஆடுகளத்தில் (சென்னை) அவர் விளாசும் 2வது டெஸ்ட் சதம் இதுவாகும். தொடர்ந்து அவர் ஜடேஜாவுடன் இணைந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இருவருமே மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 112 பந்துகளை எதிர்கொண்ட அஸ்வின் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதேபோல், 117 பந்துகளை சந்தித்த ஜடேஜா 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 80 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு  339 ரன்கள் எடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ravichandran Ashwin Chennai Test India Vs Bangladesh Ravindra Jadeja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: