Ravichandran-ashwin | rohit-sharma | indian-cricket-team | cricket | sports: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதன், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
செம்ம ஃபார்மில் ரோகித்
இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டிகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் 23 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் தனது 248-வது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்தார்மேலும், இந்திய வீரர்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது வீரர் என்கிற பெருமையையும் பெற்றார்.
அஸ்வின் விளக்கம்
இந்த நிலையில் ரோகித் சர்மாவின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் பேசி இருக்கிறார். அதில் அவர், '6 ஆண்டுகளுக்கு முன்பாக நானும் விராட் கோலியும் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்தார். உச்சக்கட்ட ஃபார்மில் பவுலர்களை விளாசிக் கொண்டிருந்தார். அப்போது நான் ஒரு பவுலராக ரோகித் சர்மா எங்கே வீசலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன்.
அப்போது விராட் கோலி திடீரென, டெத் ஓவர்களில் கேப்டன்களுக்கு பயத்தை அளிக்கக் கூடிய பேட்ஸ்மேன் யார் தெரியுமா என்று கேட்டார். அதற்கு நான், தோனியா என்று கேட்டேன். அதற்கு இல்லை, ரோகித் சர்மா என்று விராட் கோலி கூறினார். ஏன் என்று கோலியிடம் கேட்ட போது, ரோகித்துக்கு டெத் ஓவர்களில் எந்த திசையிலும் போட முடியாது. எல்லா வகையான ஷாட்களையும் ரோகித் சர்மா வைத்திருக்கிறார்.
/indian-express-tamil/media/post_attachments/BennOGZjvTupSCqv9Fa9.jpg)
வேட்டைக்காரன் படத்தில் சொல்வது போல், ரோகித் சர்மா என்றால் பயம் என்று மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு ரோகித் சர்மாவின் ஆட்டம் நெருப்பு மாதிரி இருக்கும். வரும் உலகக்கோப்பையில் ரோகித் சர்மா இன்னொரு இரட்டை சதம் விளாசுவார் என்று தான் எனக்கு தோன்றுகிறது. பதிரானா பந்துவீச்சில் அனைத்து திசைகளிலும் புல் ஷாட்டை அடித்து அசத்தினார்.
ரோகித் சர்மா ஃபார்மில் இருக்கிறார் என்பதை புல் ஷாட் மூலமாக தெரிந்துகொள்ள மாட்டேன். புல் ஷாட் ஆடிய பின் கவர் திசையின் இடதுகை பக்கம் அசால்ட்டாக ஒரு பவுண்டரி விளாசுவார். அப்படியான பவுண்டரியை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பார்த்தேன். அதனால் தான் கூறுகிறேன், உலகக்கோப்பையில் ஒரு மிகப்பெரிய இன்னிங்ஸ் ரோகித் சர்மாவிடம் இருந்து வரும். அதற்கேற்றாற் போல் கொல்கத்தாவில் போட்டிகள் உள்ளது' என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“