Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
விளையாட்டு

’உனக்காக நான் செய்தது ரொம்ப சிறிய விஷயம்’; ஜான்வி கபூர் ஃபேக் ஐ.டி.,யுடன் சாட் செய்த அஸ்வின்

சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டை வழங்கியதற்காக அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர் ஃபேக் ஐ.டி; வைரல் பதிவுகள் இங்கே

Written by WebDesk

சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டை வழங்கியதற்காக அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர் ஃபேக் ஐ.டி; வைரல் பதிவுகள் இங்கே

author-image
WebDesk
21 Mar 2024 18:20 IST

Follow Us

New Update
janhvi kapoor and ashwin

சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டை வழங்கியதற்காக அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர் ஃபேக் ஐ.டி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் ஃபேக் ஐ.டி.,யுடன் கிரிக்கெட் நட்சத்திரம் அஸ்வின் உரையாடிய ட்வீட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Advertisment

இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு மிக முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. சமீபத்தில் அஸ்வின் தனது 500 ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டை வீழ்த்தி, உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் 8 ஆவது பவுலராகவும், இந்திய அளவில் இரண்டாவது பவுலராகவும் சாதனை படைத்தார். இதையடுத்து தரம்சாலாவில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது ஒரு மதிப்புமிக்க மைல்கல் ஆகும். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி 128 ரன்கள் சேர்த்தார்.

இதனைப் பாராட்டும் விதமாக ரவீந்திர ஜடேஜா வெளியிட்ட வீடியோவில் “நான் ரவீந்திரன்.. நீ ரவிச்சந்திரன்! மீசை வெச்சா இந்திரன், மீசை வெக்கலைனா சந்திரன். அஸ்வின் அண்ணா.. நீங்கள் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்துள்ளதற்கு வாழ்த்துகள். நீங்கள் சொன்ன ஐடியாக்களை பின்பற்றி நானும் சில விக்கெட்டுகளை வீழ்த்தினேன். நீங்கள் இன்னும் பல போட்டிகளில் பல விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்” என கூறினார். வீடியோவின் இறுதியில் ’நல்லாருக்க ஆஷ்.. ரொம்ப நல்லாருக்க..” என்று உற்சாகமாக பேசியிருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்த அஸ்வின் தன்னால் ஆச்சரியத்தையும் சிரிப்பையும் அடக்க முடியவில்லை என்று பதிவிட்டு இருந்தார்.

அந்த ட்வீட்டில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் பெயரில் சில கமெண்ட்கள் பதிவிடப்பட்டன. இதனையடுத்து அது உண்மை என நம்பி அஸ்வின் அவரோடு உரையாடினார். ஒரு கட்டத்தில் அந்த நபரே ‘நான் ஃபேக் ஐடி’ எனக் கூற ரசிகர்கள் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

இந்தநிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டை வழங்கியதற்காக அஸ்வினுக்கு ஜான்வி கபூர் ஃபேக் ஐ.டி. பயனர் நன்றி தெரிவித்துள்ளார்.  

"#CSKvRCBக்கான பாக்ஸ் டிக்கெட்டுக்கு நன்றி அஷ்வின் சார். சேப்பாக்கத்தில் தல மற்றும் கிங்கை விரைவில் பார்க்க விரும்புகிறேன்" என்று ஜான்வி கபூர் ஃபேக் ஐ.டி பயனர் பதிவிட்டுள்ளார். 

The least I can do for you😍😍.

Btw can you send me those G stand tickets in return for what I have done for you? https://t.co/qCYhqD7mjh

— Ashwin 🇮🇳 (@ashwinravi99) March 19, 2024

இதற்கு "உனக்காக நான் செய்தது ரொம்ப சிறிய விஷயம். உனக்காக நான் செய்ததற்கு ஈடாக அந்த ஜி ஸ்டாண்ட் டிக்கெட்டுகளை எனக்கு அனுப்ப முடியுமா?" என்று அஸ்வின் அந்த ஃபேக் ஐ.டி கணக்கிற்கு பதிலளித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ravichandran Ashwin Janhvi Kapoor

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!