இவரு பெரிய கோலி... சக வீரரை 'சாவடிச்சிருவேன்' என்ற அஸ்வினை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

பலருக்கும் அட்வைஸ் கொடுக்கும் அஸ்வின் ஏன் இப்படி கோபப்படுகிறார்? என்றும், ட்விட்டர் (எக்ஸ்) வலைதள இன்னொரு கோலிக்கு தயாராக இல்லை என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பலருக்கும் அட்வைஸ் கொடுக்கும் அஸ்வின் ஏன் இப்படி கோபப்படுகிறார்? என்றும், ட்விட்டர் (எக்ஸ்) வலைதள இன்னொரு கோலிக்கு தயாராக இல்லை என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Ravichandran Ashwin Loses Cool During TNPL Eliminator Chepauk Super Gillies vs Dindigul Dragons Match Video Goes Viral Tamil News

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் சக வீரரை 'சாவடிச்சிருவேன்' என்று அவர் கூறியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பிஎல் 2024) டி20 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிப்பாக நடந்து வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்தத் தொடரில் தற்போது பிளே ஆஃப் போட்டிகள் நடந்து வருகிறது. தகுதிச் சுற்று 1ல் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய லைகா கோவை கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. 

எலிமினேட்டர் சுற்றில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தகுதிச் சுற்று 2-க்கு முன்னேறிய திண்டுக்கல் டிராகன்ஸ், முதல் தகுதி சுற்றில் தோல்வியுற்ற ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொள்கிறது. 

சக வீரரை 'சாவடிச்சிருவேன்' என்ற அஸ்வின் 

Advertisment

இந்த தொடருக்கான திண்டுக்கல் டிராகன்ஸ்  அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் செயல்பட்டு வரும் நிலையில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் சக வீரரை 'சாவடிச்சிருவேன்' என்று அவர் கூறியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் டிராகன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 159 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய திண்டுக்கல் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இப்போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றிபெற்றாலும் கூட போட்டியின் நடுவே கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின்  கடுமையாக கோபமடைந்து அணியின் சக வீரரை திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 16-வது ஓவரில் திண்டுக்கல் வீரர்கள் ரன் ஓடும்போது அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இதனைக் கண்ட அஸ்வின் மிகவும் கடுப்பாகியுள்ளார். 

Advertisment
Advertisements

அப்போது, டக் -அவுட்டில் அமர்ந்திருந்த அஸ்வின் வேகமாக எழுந்து, 'சாவடிச்சிருவேன், ஒழுங்கா விளையாடு' என்பது போல கடும் கோபத்துடன் கத்தினார். இதனை பார்த்த அங்கிருந்த வீரர்கள் பலரும் அதிர்ச்சியாக அஸ்வினை பார்த்தார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலருக்கும் அட்வைஸ் கொடுக்கும் அஸ்வின் ஏன் இப்படி கோபப்படுகிறார்? என்றும், ட்விட்டர் (எக்ஸ்) வலைதள இன்னொரு கோலிக்கு தயாராக இல்லை என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

ஆடுகளத்தில் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் அப்படியே வெளிப்படுத்துவார் கோலி. அவரைப் போலவே அஸ்வின் வெளிப்படுத்துவதாகவும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Ravichandran Ashwin Tnpl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: