Virat Kohli | Indian Cricket Team | Ravichandran Ashwin: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளராக தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் இருந்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர், இதுவரை 489 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமான பல சாதனைகளை படைத்து அசத்தி உள்ளார்.
பொதுவாக, அஸ்வின் எப்போதும் கடினமாக உழைக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். முன்னாள் இந்திய வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சங்கர் பாசு அல்லது பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் என யாரிடம் கேட்டாலும் அவரது உழைப்பு குறித்து கூறுவார்கள்.
அத்துடன் ஒரு பீல்டராக அஸ்வின் முன்னேற்றம் அடைய அவரது தடகள திறமைக்காக பல தியாகங்களை செய்துள்ளார். இந்நிலையில், முன்னாள் இந்திய மகளிர் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமனுடனான உரையாலில் அஸ்வின் நவீன கால விளையாட்டின் தேவைக்கு ஏற்ப தன்னை எப்படி மேம்படுத்திக் கொண்டார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
"என் வாழ்க்கையில் நான் செய்த மிக எளிதான தியாகங்களில் இதுவும் ஒன்று என்று நான் கூறுவேன். நான் எனது உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்தேன், ஆனால் நான் அதை எனக்கு எதிராக அல்லது ஒரு சாக்குப்போக்காக ஒருபோதும் கூறமாட்டேன். அதற்குக் காரணம் நான் மிகவும் விரும்பும் இந்த விளையாட்டு தான். நீங்கள் எதையாவது அதிகமாக நேசிப்பீர்களானால், அது தொடர்புடையதாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தும் இயற்கையான நீட்சியாகும்.
/indian-express-tamil/media/post_attachments/BHXRYIWSp1SRRrv7s8Pg.jpg)
நான் எனது உணவை தியாகம் செய்துள்ளேன். எனது வாழ்க்கை முறையை தியாகம் செய்துள்ளேன். இரட்டிப்பு கடினமாக பயிற்சியளித்தேன். ஆனாலும் என்னால் ஒருபோதும் விராட் கோலியாக இருக்க முடியாது. அது நான் சமாதானம் செய்து கொண்ட ஒன்று. ஏனென்றால் அது அவருடைய பயணம் மற்றும் இது எனது பயணம்.
என்னைப் பொறுத்தவரை, நான் இயற்கையாகவே ஒரு தடகள வீரர் போல் இல்லை என்பது என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் ஒட்டிக்கொள்ளும் ஒரு குறிச்சொல்லாக இருக்கிறது. ஆனால் அது கடினமாக உழைத்து தொடர்புடையதாக இருப்பதற்கு என்னை ஒருபோதும் நிறுத்தவில்லை. என்னைப் பொறுத்தவரை, என்னை தரையில் நிறுத்தி, எனது திறமையை வெளிப்படுத்துவது முன்னணியில் உள்ளது. நான் அதை ஒரு தியாகமாக பார்த்ததில்லை. மாறாக, இது இன்பம் மற்றும் மகிழ்ச்சியின் முழுமையான பயணமாகும்" என்று ஸ்போர்ட்ஸ்டாருக்கான நிகழ்ச்சியில் அஷ்வின் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“