Ravichandran ashwin: சென்னையை சேர்ந்த ஆப்-ஸ்பின்னரான ரவிச்சந்திர அஸ்வின் உலகக் கோப்பை அணிக்கு தேர்வாகி உள்ளார். உலக கோப்பை அணிக்கு அஸ்வின் தேர்வாகி இருப்பது இது 3வது முறையாகும்.
இவர் ஏற்கனவே, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை அணியில் தேர்வாகி இருந்தார்.
இந்த நிலையில், ஹர்ஷா உடன் குட்டி ஸ்டோரி ஒன்றில் சச்சின் தெண்டுல்கர் பற்றி பகிர்ந்துக்கொண்டார். அப்போது, “சச்சின் தெண்டுல்கர் வெறும் பெயர் அல்ல; அது ஓர் உணர்வு” என ரவிச்சந்திர அஸ்வின் கூறினார்.
மேலும், “சச்சின் டெண்டுல்கர் எப்படி ஒரு முழு தேசத்தின் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தார்” எனவும் கூறியுள்ளார்.
உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், சூர்ய குமார் யாதவ், , ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர்.
காயம் காரணமாக அக்ஷர் பட்டேல் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் ரவிச்சந்திர அஸ்வின் நேற்று சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“