‘நான் ரவி இந்திரன், நீங்க ரவி சந்திரன்...’ 100 டெஸ்ட்களில் 500 விக்கெட்... அஷ்வினை வாழ்த்திய ஜடேஜா!

“நம் இருவரின் பெயரில் ஒரு ஒற்றுமையிருக்கிறது. நான் ரவி இந்திரன், நீங்கள் ரவி சந்திரன். மீசை வைத்தவன் இந்திரன், மீசை வைக்காதவன் சந்திரன்” என்று அஷ்வினுக்கு ஜடேஜா ஜாலியாக வாழ்த்துக் கூறி உள்ளார்.

“நம் இருவரின் பெயரில் ஒரு ஒற்றுமையிருக்கிறது. நான் ரவி இந்திரன், நீங்கள் ரவி சந்திரன். மீசை வைத்தவன் இந்திரன், மீசை வைக்காதவன் சந்திரன்” என்று அஷ்வினுக்கு ஜடேஜா ஜாலியாக வாழ்த்துக் கூறி உள்ளார்.

author-image
WebDesk
New Update
jadeja ashwin

ரவீந்திர ஜடேஜா - ரவிச்சந்திரன் அஷ்வின்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சர்வதேச அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை எடுத்த தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

சர்வதேச கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500-விக்கெட்டுகளை எடுத்த தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 

அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரில்,  இந்தியா வெற்றி பெறுவதற்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா முக்கியப் பங்கு வகித்தனர். இவர்கள் இருவரின் சுழலில் இங்கிலாந்து அணி நிலைகுலைந்துபோனது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்  ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரின்போதுதான், தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை எடுத்த ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. 

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500-விக்கெட்டுகளை எடுத்த தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 100 டெஸ்ட் போட்டிகளை நிறைவு செய்த ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisment
Advertisements

அந்த வகையில், ரவீந்திர ஜடேஜா அஷ்வினுக்கு தமிழில் வாழ்த்து கூறிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், “ஹாய் அஷ் அண்ணா. 100 போட்டிகளில் விளையாடி 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். உங்களின் இந்தச் சாதனையால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்திய கிரிக்கெட்டில் உங்களுடைய பங்கு அபாரமானதாகும். நீங்கள் தொடர்ந்து இன்னும் நிறைய விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அப்புறம் முக்கியமாக, உங்களுடைய மாஸ்டர் மூளையை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நானும் சில விக்கெட்டுகளை எடுத்து உங்களைப்போல் ஒரு ஜாம்பவானாக முடியும். நம் இருவரின் பெயரில் ஒரு ஒற்றுமையிருக்கிறது. நான் ரவி இந்திரன், நீங்கள் ரவி சந்திரன். மீசை வைத்தவன் இந்திரன், மீசை வைக்காதவன் சந்திரன்” என்று ரஜினிகாந்த் நடித்த ‘தில்லு முல்லு’ படத்தின் பிரபலமான டயலாக் போல, ஜாலியாக வாழ்த்துக் கூறி உள்ளார். 

சி.எஸ்.கே வீரர் ரவீந்திர ஜடேஜா, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்து பகிர்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்த ஐ.பி.எல் தொடரில், ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்ந்து விளையாடிய அஷ்வின், ஜடேஜா இருவரும் ஐ.பி.எல் தொடரில் எதிரெதிர் அணிகளில் விளையாட உள்ளனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ravindra Jadeja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: