Advertisment

அவுட்டா இல்லையா? ஜடேஜா ஆட்டமிழப்பு குறித்து ரசிகர்கள் கடும் அதிருப்தி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜா ஆட்டமிழப்பு குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Ravindra Jadeja dismissal fans react DRS proves inconclusive IND vs ENG 1st Test Tamil News

இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் தவறான தொழில்நுட்பம் காரணமாக அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India vs England | Ravindra Jadeja: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Advertisment

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி அதிகபட்சமாக ஜடேஜா 87 ரன்களும், ராகுல் 86 ரன்களும், ஜெய்ஸ்வால் 80 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டை வீழ்த்தினார். தற்போது இங்கிலாந்து அணி அதன் 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. 

ஜடேஜா அவுட்டா இல்லையா? 

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்திய ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜா ஆட்டமிழப்பு குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் ஜடேஜா - அக்சர் படேல் ஜோடி பேட்டிங் ஆட களமிறங்கினர். இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில், அவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினார்கள். இருவரும் முதல் 7 ஓவர்களுக்கு 6 ரன்கள் மட்டுமே எடுத்தனர். லீச் வீசிய 8வது ஓவரில் மட்டும் 9 ரன்கள் சேர்த்தனர். 

தொடர்ந்து அதிரடி காட்ட நினைக்கையில் ரூட் வீசிய அடுத்த ஓவரில் (119.3 ஓவர்) ஜடேஜா எல்.பி.டபிள்யூ அவுட் ஆனார். அவர் சதம் விளாசுவர் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா 87 ரன்களுக்கு அவுட் ஆகியதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ரூட்டின் பந்து வீச்சைத் தடுக்க ஜடேஜா முன்னோக்கி நகர்ந்த போது, ​​​​பந்து அவரது பேட்களைத் தாக்கியது. எனவே, நடுவர் அவுட் கொடுத்தார். 

இருப்பினும், ஜடேஜா உடனடியாக அப்பீல் செய்தார். அல்ட்ராஎட்ஜ் காட்டப்பட்ட போது, பந்து பேட்டுக்கும் பேட்களுக்கும் இடையில் இருக்கும்போது ஸ்பைக்கைக் காட்டியதால் ரசிகர்கள் அவுட் இல்லை என ஆரவாரம் செய்தனர். ஆனால், பந்து முதலில் பேட்டையைத் தாக்கியதா என்பதை டி.வி நடுவரால் திட்டவட்டமாக தீர்மானிக்க முடியவில்லை. பால்-ட்ராக்கிங் செய்த போது பந்து ஆப்சைடில் ஸ்டம்புக்கு மேலே தட்டியது. கடினமான அழைப்பாக இருந்தபோதிலும், கள நடுவரின் முடிவே இறுதி செய்யப்பட்டது. 

இந்த முடிவைப் பார்த்த ஜடேஜா தலையை அசைத்தவாரே எதுவும் பேசாமல் பெவிலியன் நோக்கி நடந்தார். ஆனால், கள நடுவரின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும் ரசிகர்கள் ஜடேஜா அவுட் இல்லை என்று கூறி விமர்சித்து வருகிறார்கள். 

முன்னதாக, இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் தவறான தொழில்நுட்பம் காரணமாக அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டார். அப்போது, பால்-ட்ராக்கின் செய்யப்படுகையில் பேட்டில் எட்ச் பட்ட ஸ்பைக் காட்டியது. அந்த ஸ்பைக் பந்து ரூட்டின் பேட்டுக்கு அருகில் வருவதற்கு முன்பே ஏற்பட்டது. அல்ட்ராஎட்ஜில் அலைகள் வந்தன. அப்போது மூன்றாம் நடுவர் கள நடுவரை ரூட் 'நாட் அவுட்' என்று கூற கட்டாயப்படுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs England Ravindra Jadeja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment