Ravindra Jadeja Tamil News: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வீரராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. அண்மையில் இங்கிலாந்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜடேஜா களமாடி இருந்தார். இந்தப் போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். இதன் மூலம் இந்தியாவின் பிஷன் சிங் பேடியை முந்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நாட்டின் மிகவும் வெற்றிகரமான இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்கிற சாதனையைப் படைத்தார்.
Advertisment
இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 24.25 சராசரியிலும், 2.44 என்ற எகானமி ரேட்டிலும் 268 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிஷன் சிங் பேடி 67 போட்டிகளில் 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக, டெஸ்டில் 4வது வெற்றிகரமான இடது கை ஸ்பின்னர் ஆவார். அவர் இலங்கையின் ரங்கனா ஹெராத் (93 போட்டிகளில் 433), டேனியல் வெட்டோரி (113 போட்டிகளில் 362), இங்கிலாந்தின் டெரெக் அண்டர்வுட் (86 போட்டிகளில் 297 விக்கெட்) ஆகியோருக்கு பின்னிலையில் உள்ளார்.
ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வரும் ஜடேஜா கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில், 30.50 சராசரியில் அரை சதம் அடித்து 183 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 70 ஆக உள்ளது. மேலும், அவர் சராசரியாக 19.84 மற்றும் 2.63 என்ற எகானமி ரேட்டில் 25 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இந்த ஆண்டு ஒரு இன்னிங்ஸில் அவரது சிறந்த பந்துவீச்சு எண்ணிக்கை 7/42 ஆகும்.
Advertisment
Advertisements
2023 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில், ஜடேஜா 9 இன்னிங்ஸ்களில் 32.75 சராசரியுடன் 8 போட்டிகளில் 262 ரன்கள் எடுத்துள்ளார், ஒரு அரை சதத்துடன். அவர் எட்டு போட்டிகளில் 21.33 சராசரி மற்றும் 2.78 என்ற எகானமி ரேட்டில் 27 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
ஜடேஜா க்ரஷ்
இந்நிலையில், ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் 'எப்போதும் க்ரஷ்' 'Forever crush' என்ற கேப்சனில் தனது குதிரையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜடேஜா தனது குதிரை மீது அளவுக்கு அதிகமாக அன்பை பொழியக்கூடியவர். அவர் தனது குதிரையுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபரில், ஜடேஜா தனது குதிரையுடன் இதே போன்ற ஒரு படத்தைப் பகிர்ந்து இருந்தார். அதன் கேப்டசனில் "மை க்ரஷ்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், 'எப்போதும் க்ரஷ்' என்ற கேப்டசனில் 3 புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ளார்.