Advertisment

‘என் மனைவி இமேஜை கெடுப்பதை நிறுத்துங்க’: குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த ஜடேஜா தந்தை மீது கடும் சாடல்

ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங் ஜடேஜா தனக்கும் தனது மகனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், ரிவாபா குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ravindra Jadeja lashes out at his father Anirudhsinh Jadeja for blaming wife Rivaba Tamil News

மகன் - மனைவி மீது ஜடேஜா தந்தை பரபர குற்றச்சாட்டு - கடும் சாடல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ravindra Jadeja: இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டர் வீரராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. இவரது மனைவி ரிவாபா ஜடேஜா ஆவார். ராஜ்கோட்டில் உள்ள குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த ரிவாபாவை 2016ஆம் ஆண்டு ஜடேஜா திருணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நித்யானா ஜடேஜா என்கிற மகள் உள்ளார். 

Advertisment

அரசியலில் களம் புகுந்த ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, கடந்த ஆண்டு நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜடேஜாவின் சகோதரி நைனபாவை தோற்கடித்து ஜாம்நகர் வடக்கு தொகுதியில் அபார வெற்றி பெற்றார். அவரது தேர்தல் பணிகளுக்கு ஜடேஜா உறுதுணையாக இருந்தார். மேலும், தனது மனைவிக்காக வாக்குகளை சேகரிக்க தேர்தல் களத்தில் செயல்பட்டதையும் காண முடிந்தது. 

ஜடேஜா தந்தை பரபர குற்றச்சாட்டு 

இந்நிலையில், இந்திய ஆல்ரவுண்டர் வீரரான ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங் ஜடேஜா தனக்கும் தனது மகனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், ரிவாபா குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதுதொடர்பாக திவ்யா பாஸ்கர் என்கிற குஜராத் செய்தி நிறுவனத்துக்கு தந்தை அனிருத்சிங் ஜடேஜா அளித்துள்ள பேட்டியில், “நான் உனக்கு ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமா? எனக்கும் ரவீந்திராவுக்கும் அவரது மனைவி ரிவாபாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்களை அழைப்பதும் இல்லை, அவர்கள் எங்களை அழைப்பதும். 

நான் தற்போது ஜாம்நகரில் தனியாக வசிக்கிறேன். எனது கிராமத்தில் எனக்கு நிலம் உள்ளது. எனது மனைவியின் பென்ஷன் ரூ20,000-ல் இருந்து எனது செலவுகளை நிர்வகிக்கிறேன். நான் 2BHK வீட்டில் தனியாகத் தான் வசிக்கிறேன். எனக்கு சமையல் செய்யும் வீட்டு உதவியாளர் ஒருவர் இருக்கிறார். நான் என் சொந்த நிபந்தனைகளில் என் வாழ்க்கையை வாழ்கிறேன். எனது 2BHK பிளாட்டில் கூட ரவீந்திரருக்கென தனி அறை உள்ளது.

ஆனால், ரவீந்திரன் தனி பங்களாவில் வசிக்கிறார். அவரும் இதே நகரத்தில் தான் வசிக்கிறார். ஆனால் நான் அவரைப் பார்க்கவில்லை. அவர் மனைவி என்ன மாயம் செய்தார் என்று தெரியவில்லை. எனக்கு அவர் தேவையில்லை. அவர் என் தந்தையல்ல; நான் தான் அவருடைய தந்தை. அவர்தான் என்னை அழைக்க வேண்டும். இதெல்லாம் என்னை அழ வைக்கிறது. அவருடைய சகோதரியும் ரக்ஷாபந்தன் அன்று அழுகிறார்.

ரவீந்திரனை கிரிக்கெட் வீரராக மாற்ற நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். நான் பணம் சம்பாதிக்க 20 லிட்டர் பால் கேன்களை தோளில் சுமந்தேன். வாட்ச்மேனாகக் கூட வேலை பார்த்திருக்கிறேன். நாங்கள் ஏழ்மையான பின்னணியில் இருந்து வருகிறோம். அவருடைய சகோதரி என்னை விட அதிகமாக செய்துள்ளார். அவரை ஒரு தாயாகப் பார்த்துக்கொண்டார். இருப்பினும், அவர் தனது சகோதரியுடன் கூட தொடர்பில் இல்லை.

அவர் எனது மகன் என்று சொல்லக்கூட என் இதயம் வலிக்கிறது. நான் அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்காமல் இருந்திருக்க வேண்டும். அவர் கிரிக்கெட் வீரராக மாறாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் இப்போது நாங்கள் இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்.  

கல்யாணம் ஆன மூணு மாசத்துல எல்லாத்தையும் அவங்க பெயருக்கு மாற்றணும்னு சொன்னாங்க. எங்கள் குடும்பத்தில் பிளவை உருவாக்கினார். ரவீந்திராவின் உணவகத்தின் உரிமை தொடர்பாக தகராறு ஏற்பட்டது, அவரது மனைவி (ரிவாபா) அவரிடம் உணவகத்தின் உரிமையை தன் பெயருக்கு மாற்றச் சொன்னார். அதனால் அவர்களுக்குள் ஒரு பெரிய சண்டை கூட ஏற்பட்டது. அவர் இனிமேல் விஷயங்களை நிர்வகிப்பார் என நினைத்த அவரது சகோதரி கையெழுத்திட ஒப்புக்கொண்டார்

அவரது மனைவி (ரிவாபா) குடும்பத்தை விரும்பவில்லை. சுதந்திரமான வாழ்க்கையை விரும்பினார். நான் தவறாக இருக்கலாம், நைனாபா (ரவீந்திரனின் சகோதரி) தவறாக இருக்கலாம், ஆனால் நீங்கள் சொல்லுங்கள், எங்கள் குடும்பத்தில் உள்ள 50 உறுப்பினர்களும் எப்படி தவறாக இருக்க முடியும்? குடும்பத்தில் யாருடனும் எந்த உறவும் இல்லை; வெறும் வெறுப்பு தான் அவர்களுக்கு இருக்கிறது. நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. ஐந்து வருடங்களாக எங்கள் பேத்தியின் முகத்தைக் கூட நாங்கள் பார்க்கவில்லை’’ என்று அவர் கூறியுள்ளார். 

ஜடேஜா கடும் சாடல் 

இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா தனது தந்தை அனிருத்சிங் ஜடேஜாவை கடுமையாக சாடியுள்ளார். மேலும், குஜராத்தியில் எழுதியுள்ள அவரது சமூக வலைதள குறிப்பில், தனது மனைவியின் இமேஜை கெடுக்க வேண்டாம் என்று தனது தந்தைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ரவீந்திர ஜடேஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நேர்காணல்களில் சொல்லப்பட்டதை புறக்கணிப்போம். 

திவ்யா பாஸ்கருக்கு அளித்த சந்தேகத்திற்குரிய பேட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அர்த்தமற்றவை மற்றும் பொய்யானவை. நான் மறுக்கும் ஒருதலைப்பட்சமான கருத்துக்கள் அவை. எனது மனைவியின் பெயரைக் கெடுக்கும் முயற்சி முறையற்றது மற்றும் கண்டிக்கத்தக்கது. எனக்கும் சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால் அந்த விஷயங்களை நான் பொதுவில் வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது." என்று கூறியுள்ளார். 

ஐதராபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 86 ரன்கள் எடுத்திருந்த ரவீந்திர ஜடேஜா, விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது போட்டியில் தொடை காயம் காரணமாக விலகினார். தற்போது பெங்களூரில் உள்ள என்.சி.ஏ-வில் இருக்கும் அவர் தனது முழு உடற்தகுதியை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற வாய்ப்புள்ளது.

இந்த தொடரில் ஐதராபாத்தில் நடந்த தொடக்க போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது.

ஆங்கிலத்தில் படிக்கவும்:  Angry Ravindra Jadeja lashes out at his father

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ravindra Jadeja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment