scorecardresearch

‘சில ரசிகர்களுக்கு இது தெரியலையே’: மீண்டும் ஜடேஜா சர்ச்சை ட்வீட்

‘ஐ.பி.எல்-க்கு தெரிகிறது. ஆனால், சில ரசிகர்களுக்கு தான் தெரியவில்லை’ என கிண்டலாக ட்வீட் செய்து இருந்தார் ஜடேஜா.

Ravindra Jadeja Posted Hard-Hitting Tweet For CSK Fans Tamil News
Ravindra Jadeja Again controversy tweet Tamil News

Ravindra Jadeja Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபையர்-1 ஆட்டத்தில் சென்னை – குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.

இந்த ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் 16 பந்தில் 22 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறப்பான ஆட்டத்தினால் அவருக்கு அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் ’போட்டியின் சிறந்த மதிப்புமிக்க வீரர்’ விருது வழக்கப்பட்டது.

ஜடேஜா ட்வீட்

இந்த நிலையில், ஜடேஜா அந்த விருதுடன் எடுத்த புகைப்படடத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘மிகுந்த மதிப்புமிக்க வீரர் என்று ஐ.பி.எல்-க்கு தெரிகிறது. ஆனால், சில ரசிகர்களுக்கு தான் தெரியவில்லை’ என கிண்டலாக ட்வீட் செய்துள்ளார். இது தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

2023-ஆம் ஆண்டு ஐபிஎல் லீக் போட்டிகளில் ஜடேஜா சிறப்பாக விளையாடாததால் சென்னை அணியின் ரசிகர்கள் சிலர் ஜடேஜாவை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். மேலும், இந்த சீசனுடன் கேப்டன் தோனி ஓய்வு பெற உள்ளார் என தகவல்கள் வெளி வந்த நிலையில் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்காக ஜடேஜா சீக்கிரம் அவுட் ஆக வேண்டும் என ரசிகர்கள் சிலர் கோரினர். ஜடேஜா அவுட் ஆன பின்னர் தோனி களம் இறங்கும் போது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விசில் சத்தத்தையும், கரவோஷங்களையும் எழுப்பி இருந்தனர்.

ஜடேஜாவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து அவரது மனைவி ரிவாமா, “அமைதியாக… கடினமாக உழையுங்கள், உங்கள் வெற்றியே உங்கள் குரலாக இருக்கட்டும்… என் அன்பே” என்று பதிவிட்டுள்ளார்.

புதிய சாதனை

நேற்றைய ஆட்டத்தில் தசன் ஷனகாவின் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றியதன் மூலம், ஐபிஎல் தொடரில் தனது 150-வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார் ஜடேஜா.

ஏற்கனவே பேட்டிங்கில் 1000 ரன்களை எட்டியுள்ள ஜடேஜா பந்து வீச்சில் 150 விக்கெட்களையும் கைப்பற்றியதன் மூலம், இந்த மைல்கல்லை எட்டிய 3-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஜடேஜா பேட்டிங்கில் ஜடேஜா 2,677 ரன்கள் சேர்த்துள்ளார்.

இந்த பட்டியலில் டுவைன் பிராவோ 1,560 ரன்களையும் 183 விக்கெட்களையும் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். சுனில் நரேன் 1,046 ரன்கள் 163 விக்கெட்களை எடுத்து 2வது இடத்தில் உள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ravindra jadeja posted hard hitting tweet for csk fans tamil news