சஞ்சய் மஞ்சுரேக்கரை விளாசிய ரவீந்திர ஜடேஜா! ட்விட்டரில் கடும் தாக்கு!

2019 ஐபிஎல் தொடரில் இருந்தே, மும்பை அணிக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஒருசார்பாக வர்ணனை செய்கிறார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்நாள் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேக்கர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடரிலும், தோனியின் பேட்டிங் நுணுக்கங்களையும், அவரது ஆட்ட யுத்தியையும் சஞ்சய் விமர்சித்து இருந்தார். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஐபிஎல் தொட்டே, தோனியை டார்கெட் செய்யும் விதமாகவே சஞ்சய் பேசி வருவதும் மறுப்பதற்கில்லை. இந்நிலையில் […]

ravindra jadeja reply to sanjay manjrekar world cup 2019 - சஞ்சய் மஞ்சுரேக்கரை விளாசிய ரவீந்திர ஜடேஜா! ட்விட்டரில் கடும் தாக்கு!
ravindra jadeja reply to sanjay manjrekar world cup 2019 – சஞ்சய் மஞ்சுரேக்கரை விளாசிய ரவீந்திர ஜடேஜா! ட்விட்டரில் கடும் தாக்கு!

2019 ஐபிஎல் தொடரில் இருந்தே, மும்பை அணிக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஒருசார்பாக வர்ணனை செய்கிறார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்நாள் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேக்கர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடரிலும், தோனியின் பேட்டிங் நுணுக்கங்களையும், அவரது ஆட்ட யுத்தியையும் சஞ்சய் விமர்சித்து இருந்தார். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஐபிஎல் தொட்டே, தோனியை டார்கெட் செய்யும் விதமாகவே சஞ்சய் பேசி வருவதும் மறுப்பதற்கில்லை.

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவை ‘bits and pieces player’ என்று சஞ்சய் விமர்சித்து இருந்தார். அதாவது, ஜடேஜாவை ‘துண்டு துணுக்கு வீரர்’ என்று வர்ணித்தார்.  இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்தியா தோற்ற பிறகு, ஜடேஜாவை அணியில் கொண்டு வருவது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்த போது, ‘நான் துண்டு துணுக்கு வீரரின் பெரிய ஆதரவாளன் இல்லை. ரவீந்திர ஜடேஜா 50 ஒவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தன் கிரிக்கெட் கரியரில் இந்த நிலையில்தான் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் Pure பவுலர். 50 ஒவர் கிரிக்கெட்டில், அவர் ஒரு பேட்ஸ்மென் மற்றும் ஸ்பின்னர். எதிர்பாராத போட்டி முடிவுகளை வைத்து நாம் முடிவுகளை எடுக்க கூடாது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி விதிவிலக்கானது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று மஞ்சுரேக்கர் பதிலளித்தார்.

இதற்கு இன்று தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ள ஜடேஜா, “நீங்கள் விளையாடியதை விட இருமடங்கு போட்டிகளில் நான் ஆடிவிட்டேன், இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறேன். சாதனை புரிந்தவர்களை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ‘வெர்பல் டயரியா’ போதும்! நிறுத்துங்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

ஜடேஜாவின் இந்த ரிப்ளை சமூக தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ravindra jadeja reply to sanjay manjrekar world cup

Next Story
உலககோப்பை கிரிக்கெட் – இங்கிலாந்து vs நியூசிலாந்து லைவ் ஸ்கோர்worldcup cricket, indian cricket team, england, new zealand, pakistan, runs ,bangladesh, australia, semis, உலககோப்பை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான்,வங்கதேசம், அரையிறுதி, ஆஸ்திரேலியா, ரன்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com