Ravindra Jadeja | IPL 2024 | Chennai Super Kings | Ms Dhoni: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று திங்கள்கிழமை சென்னையில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா சென்னையின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து, 138 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 141 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்கள் எடுத்தார்.
ரசிகர்களை பிராங்க் செய்த ஜடேஜா
இந்நிலையில், இந்தப் போட்டியில் சென்னை அணியின் எதிரடி வீரர் சிவம் துபே அவுட்டான பிறகு, தோனிக்கு முன் களத்திற்கு பேட்டிங் செய்ய வருவதுபோல பாவனை செய்து ரசிகர்களை ஏமாற்றிய ஜடேஜாவின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சீசனுடன் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி ஓய்வாக உள்ளார் என்கிற பேச்சு அதிகம் அடிப்படிட்ட நிலையில், அவர் எப்போது பேட்டிங் செய்ய வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் ஜடேஜாவின் விக்கெட்டுக்குப் பிறகு அவர் பேட்டிங் ஆட வருவார் என்பதால், ஜடேஜா சீக்கிரமே ஆட்டமிழக்க வேண்டும் ரசிகர்கள் உற்சாகமாக கத்தி கொண்டாடுவார்கள். இது பற்றி பலரும் அவரிடம் கோரிக்கை வைப்பது போன்ற பதாகைகளை ஏந்திப் பிடித்தும் இருந்தனர்.
இது தொடர்பாக அப்போது பேசிய ஜடேஜா, "மஹி பாய்க்கு (தோனி) முன்பாக நான் பேட்டிங் செய்ய வந்தபோது, ரசிகர்கள் மஹி பாயின் ஆட்டத்தை மிஸ் செய்வதை நான் உணர்ந்தேன். அதனால், நான் சீக்கிரம் அவுட் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்" என்று மன வருத்தத்துடன் கூறியிருந்தார். இதற்கு சென்னை அணி ரசிகர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது, பேட்டிங் செய்ய ஜடேஜா தான் களத்திற்குள் வர வேண்டும். ஆனால், தோனி முன்கூட்டியே தாம் வந்து பேட்டிங் செய்வதாக முடிவு எடுத்து விட்டார். ஆனால் இது ரசிகர்களுக்கு தெரியாது. வெற்றிக்கு 3 ரன்கள் தான் இருந்ததால், களத்திற்குள் தோனி வருவாரா? இல்லை ஜடேஜா வருவாரா? என ரசிகர்கள் காத்திருந்தார்கள்.
இந்த சூழலில் தான், திடீரென்று பேட் மற்றும் ஹெல்மெட் என அனைத்தையும் மாட்டிக் கொண்டு ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளியே வந்தார் ஜடேஜா. அதனால், தோனி பேட்டிங் ஆட வரமாட்டார் என ரசிகர்கள் முடிவு செய்தனர். அந்த சில நொடிகளில், ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளியே வந்த ஜடேஜா, வந்த வேகத்தில் திரும்பி உள்ளே குடுகுடுவென ஓடிவிட்டார். அதன் பிறகு, தோனி களம் புக, ஜடேஜா ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அவ்வாறு செய்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்து இருந்தாலும், அடுத்த நொடியே ஆரவாரம் செய்தனர். தோனி களமாடிய போது அவருக்கு ரஜினியின் ஜெயிலர் பட 'ஹுகும் டைகர் -கா ஹூக்கும்' பாடல் போடவே, ரசிகர்கள் செய்த ஆரவாரம் விண்ணை முட்டியது. தோனி என்ட்ரி-யின் போது எழுந்த சத்தத்தை கேட்க முடியாமல் தனது காதை மூடிக்கொண்டார் கொல்கத்தா வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல். அந்த அளவிற்கு 'தல' தோனிக்கு மசான வரவேற்பு கொடுத்தனர் ரசிகர்கள்.
ஜடேஜா பிராங்க் செய்த சம்பவம் தொடர்பாக போட்டிக்குப் பின் பேசிய சென்னை வீரர் துஷார் தேஷ்பாண்டே, 'நீ பேட்டிங் செய்யக் கிளம்புவதைப் போல் நடி, அப்போது நான் களத்திற்குள் செல்கிறேன்' என தோனி ஜடேஜாவிடம் சொன்னதைக் கேட்டேன் என்று அவர் கூறினார்.
Jadeja teased the crowd by walking ahead of Dhoni as a joke. This team man🤣💛 pic.twitter.com/Kiostqzgma
— 𝐒𝐞𝐫𝐠𝐢𝐨 (@SergioCSKK) April 8, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.