Advertisment

தூற்றியோரை போற்ற வைத்த ஜடேஜா… இனி 'சின்ன தல' இவர்தான்!

பெரும்பாலானோர் ஆட்டம் முடிந்து விட்டது. சென்னை அணிக்கு தோல்வி முகம் தான் என எண்ணிய தருணம் இருந்தது.

author-image
WebDesk
New Update
Ravindra Jadeja wins over the fans, time to call him Chinna Thala Tamil News

Ravindra Jadeja did what Dhoni had done for CSK for all these years. (IPL/BCCI)

Ravindra Jadeja - GT vs CSK, IPL 2023 Final Tamil News: ரவீந்திர ஜடேஜா ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் 5 சாம்பியன் பட்டத்தை வாகை சூட்டியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் அல்ல. அவர் அதிக விக்கெட்டுகளையும் எடுக்கவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி பந்து த்ரில் வெற்றியில் அவர் அதிகபட்ச சிக்ஸர் அல்லது பவுண்டரிகளை கூட அடிக்கவில்லை. இந்த ஆட்டத்தின் நாயகன் அல்லது இந்த சீசனின் சிறந்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட பல விருதுகளில் எதையும் அவர் வீட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை. ஆனால் மூன்று நாட்கள் நீடித்த ஐபிஎல் இறுதிப் போட்டியின் அதிகாலை நேரத்தில், ஜடேஜா மிகவும் விலைமதிப்பற்ற மற்றும் நீண்ட காலத்திற்கு பேசப்படும் ஒன்றைச் சாதித்தார். அவர் மீது ரசிகர்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார். இந்த ஆட்டத்தில் அவரின் 38 ரன்களுக்கு ஒரு விக்கெட்டும், வெறும் 6 பந்துகளில் 15 ரன்களும் எப்போதும் அவரை நினைவில் கொள்ளும்.

Advertisment
publive-image

பெரும்பாலானோர் ஆட்டம் முடிந்து விட்டது. சென்னை அணிக்கு தோல்வி முகம் தான் என எண்ணிய தருணம் இருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க தயாராகுவது போல் தோன்றியது. ரஹானே மற்றும் ராயுடுவின் அதிரடி ஆட்டம் தொடு கோட்டிற்கு அருகே அழைத்துச் சென்றது. ஆனால், கடைசி உந்துதல் தேவைப்பட்டது. கடைசி ஓவர்களின் ஆக்‌ஷன் ஹீரோவான கேப்டன் தோனியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போலவே, வான்கடேவில் செய்த அதே ஆக்‌ஷனை காட்ட களம் புகுந்து இருந்தார். வரலாறு திரும்ப வரவில்லை. இந்த சீசனில் சி.எஸ்.கே விளையாடிய ஒவ்வொரு மைதானத்துக்கும் மஞ்சள் வண்ணம் பூசிய ரசிகர்களின் இதயத்தை தோனியின் முதல் பந்திலே டக்அவுட் ஆகியது அடித்து நொறுக்கிவிட்டது.

ஜடேஜா மற்றும் சிவம் துபே ஜோடி கிரீஸில் இருக்க, கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. மோஹித் ஷர்மா வழக்கம் போல் பந்துவீச்சில் மிரட்டி 4 சரியான யார்க்கர்களை இறக்கிவிட்டார். அதனால் சென்னையின் வெற்றிக்கு இப்போது 2 பந்துகளில் 10 ஆகக் குறைந்தது. தோனி கண்களை மூடிக்கொண்டார், அவரால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. போட்டியை கண்டு களித்த ஒரு இளம் பெண் ரசிகை கண்ணீர் விட்டு கதறினார். அந்த சிறுமியைச் சுற்றியிருந்த பலரைப் போலவே அவளும் உணர்ச்சிக் குழப்பத்தில் இருந்தாள். நீண்ட இழுபறியான மூன்று நாள் ஐபிஎல் இறுதிப் போட்டி, மழை தாமதமான போதிலும் சிக்கித் தவித்தவர்களை வெகுவாகப் பாதித்தது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் பதற்றத்தில் மூழ்கியது.

அவரைச் சுற்றியுள்ள கடுமையான சூழலில் இருந்து ஒதுங்கி, ஜடேஜா பீதி பொத்தானை அழுத்தவில்லை. ஏனென்றால், அவர் இது போன்ற சூழ்நிலைகளில் முன்பு இருந்துள்ளார். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2008ல் இருந்தபோது 19 வயதில் தனது முதல் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினார். ஷேன் வார்ன் அவரை ஒரு 'ராக் ஸ்டார்' என்று அழைத்தார், அவர்கள் ஐபிஎல்லின் முதல் சாம்பியனாக சென்னை அணியை இறுதிப் போட்டியில் தோற்கடித்தனர். அதிர்ஷ்டவசமாக, சில காலமாக அவர் தோனியின் மற்றொரு உத்வேகமான கேப்டனின் சிறகுகளின் கீழ் இருக்கிறார்.

திங்கள் கிழமை நள்ளிரவைத் தாண்டிய அகமதாபாத்தில், இத்தனை ஆண்டுகளாக தோனி சிஎஸ்கேக்காகச் செய்ததை ஜடேஜா செய்தார். அவர் அதை தாமதமாக விட்டுவிட்டார். சேஸிங்கின் அந்த முக்கியமான தருணத்திற்காக அவர் காத்திருந்தார், அப்போது அழுத்தம் பேட்ஸ்மேனிடமிருந்து பந்து வீச்சாளருக்கு மாற்றப்பட்டது. தனது கேப்டனைப் போலவே பந்து வீச்சாளர் தவறு செய்யக் காத்திருந்தார். அவரும் அப்படியே செய்தார்.

மோஹித்தின் நான்கு பந்துகளுக்குப் பிறகு, பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலையீடு செய்தனர். நெஹ்ரா ஒரு வாட்டர் பாட்டிலுடன் ஒரு வீரரை அனுப்பினார். கூடவே ஒரு செய்தியையும் அனுப்பினார் என்றும் சொல்லாம். ஹர்திக்கும் தனது உள்ளீடுகளை கொடுத்தார். பதட்டத்துக்குள்ளான நீண்ட பேச்சுக்கள் மோஹித்தின் ரிதத்தை உடைத்தது. குஜராத் அணியின் டெத்-ஓவர் பந்துவீச்சாளரான அவர் தனது 5வது பந்தில் லென்த்தில் தடுமாறினார். இது யார்க்கர் லென்த்தை விட சற்று குறைவாக இருந்தது மற்றும் ஜடேஜா, கிரீஸில் காத்திருந்து, காட்சித் திரையில் அடித்தார். இது அவரது நீண்ட வாழ்க்கையில் மிகவும் பிரபலமான சிக்ஸாக இருக்கும். கடைசி பந்தில் நான்கு தேவைப்பட்ட நிலையில், மோஹித் லைனை தவறவிட்டார். ஷார்ட் ஃபைன் லெக் பீல்டரைக் கடந்த பந்தை ஜடேஜா தனது கால்களில் செலுத்தினார். பந்து பவுண்டரி கயிற்றைக் கடந்தது, மைதானத்தைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் வெடி வெடித்து கொண்டாடப்பட்டது.

தோனியைப் போல் ஜடேஜாவும் செய்து காட்டினார். ஸ்டாண்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்த அவர், தன் ‘சுவிஷிங் வாள்’ (பேட்டை சுழற்றுதல்) கொண்டாட்டத்தைக்கூட செய்ய மறந்துவிட்டார். அரிய உணர்ச்சிக் காட்சியில், தோனி அவரை காற்றில் தூக்கி கட்டியனைத்தார். தோனியிடம் இருந்து இந்த அன்பான அரவணைப்பை பெற்ற ஒரே வீரராக ஜடேஜா வரலாற்றில் இடம்பிடிக்கலாம். ஜடேஜா தனது ஆட்டத்தை கேப்டனுக்காக அர்ப்பணித்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, எதிர்காலத்தில் அவர்களுக்காக உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

publive-image

இந்த நேரத்தில் சென்னை அணியின் நாயகன் பெரிய மனிதராக இருந்தார். அவர் தனது கோபம் கொண்டாட்ட மனநிலையை கெடுக்க விடவில்லை. ஜடேஜாவுக்கும் சிஎஸ்கே ரசிகர்களுக்கும் இடையே ஒற்றுமை இல்லை. தோனி அல்லது சுரேஷ் ரெய்னாவிடம் இருந்ததைப் போல சேப்பாக்கம் ஜடேஜாவுக்கு இடம் கொடுக்கவில்லை. பல ஆண்டுகளாக, பெரும்பாலும் சமூக ஊடகங்கள் மூலம், ஜடேஜா தனக்குத் தகுதியான கவனத்தையோ, பாசத்தையோ பெறவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் முன்னணி ஆல்-ரவுண்டராக இருந்து, அனைத்து வடிவிலான இந்திய வழக்கமான மற்றும் 5 ஐபிஎல் பட்டங்களை வென்றவர்; ஜடேஜா தனது போட்டியாளர்களால் குறைத்து மதிப்பிடப்படவில்லை அல்லது உரிமையாளரால் குறைவாக மதிப்பிடப்படவில்லை, ஆனால் ரசிகர்களால் குறைவாக மதிப்பிடப்பட்டார். இது அவர் நீண்ட காலமாக சுமந்து வரும் வெறுப்பு. சேப்பாக்கத்தில் தோனியும் மற்றவர்களும் காதை பிளக்கும் விசில்களால் வரவேற்கப்பட்டாலும், ஜடேஜாவுக்கு அதே வரவேற்பு கிடைக்கவில்லை.

பெரும்பாலும் தோனிக்கு சற்று மேலே பேட்டிங் செய்யும் அவரை சிஎஸ்கே ரசிகர்கள், ஜடேஜாவின் ஆட்டமிழக்க வேண்டும் தல தரிசனத்தைப் பெற வேண்டும் என்று சிடுமூஞ்சித்தனமாக வாழ்த்தியுள்ளனர். ஒரு ஆட்டத்திற்குப் பிறகு, அவர் ஏன் ஆர்டரில் அதிகமாக பேட் செய்யவில்லை என்று கேட்டபோது, ​​“நான் மஹி பாயின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். நான் அவருக்கு முன் பேட்டிங் செய்தால், நான் அவுட் ஆக வேண்டும் என சில ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்."அவர் கூறினார். மேலும், தோனி உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டன. அவரை தூற்றியோர் முகத்தில் கரியைப் பூசினார் ஜடேஜா.

publive-image

கடந்த சீசனில் ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து இடையிலேயே நீக்கப்பட்டார். அவர் தோனியின் படிப்பறிவாளராக இருக்க வேண்டும், அவருடைய வாரிசாகத் தெரிந்தார், ஆனால் நிர்வாகம், அணியின் இடைக்கால சரிவைத் தடுக்கும் முயற்சியில், மாற்றத்தை நிறுத்தியது. தோனி மீண்டும் தலைமைக்கு வந்தார், ஜடேஜா, தெரிந்தவர்கள் நம்பினால், காயப்படுத்தப்பட்டார். அதிகாரப்பூர்வமாக, அவர் காயமடைந்தார்.

சில நாட்களுக்குள் அவர் ஒரு செய்தியை வெளியிட்டார்: “உங்கள் தரத்தை யாருக்காகவும் அல்லது எதற்காகவும் குறைக்காதீர்கள். சுயமரியாதை தான் எல்லாமே”. இந்த சீசனில் கூட, சில மறைமுக ட்வீட்களை அவர் நிறுத்தவில்லை. அது வதந்தி ஆலைகளுக்கு எரியூட்டியது. மே 21 அன்று, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்மா உங்களுக்கு விரைவில் அல்லது பின்னர் அது நிச்சயமாக கிடைக்கும்". மே 24 அன்று, அவரது ட்வீட் மிகவும் நேரடியாக இருந்தது. அவருக்கு அப்டாக்ஸ் மிகவும் மதிப்புமிக்க சொத்து விருது வழங்கப்பட்டது. அதை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதில், "அப்டாக்ஸ்-க்கு தெரிகிறது. ஆனால் சில ரசிகர்களுக்குத்தான் தெரியவில்லை" என்று பதிவிட்டார்.

ஜடேஜாவுக்கு உரிய கைதட்டல் ஏன் கிடைக்கவில்லை என்பது இன்றளவும் புதிராக உள்ளது. அவரது நீண்ட கால பந்துவீச்சு ஜோடியான ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற அவரது மூளை சார்ந்த பந்துவீச்சு கலை அறிவுசார்ந்ததாக இல்லை. இயன் போத்தம், கபில்தேவ், ஆண்ட்ரூ பிளின்டாஃப் மற்றும் ஷான் பொல்லாக் ஆகியோரின் பேட்டிங் சராசரியை விட, பிஷன் சிங் பேடி, எரபள்ளி பிரசன்னா, எஸ். வெங்கடராகவன் மற்றும் பி.எஸ்.சந்திரசேகர் ஆகியோரை விட அவரது பந்துவீச்சு சிறப்பாக இருக்கும். அப்படியான ஒரு உண்மையான ஆல்-ரவுண்டரின் சாதனையை இந்தியா அங்கீகரிக்கத் தவறிவிட்டது.

2013 ஆம் ஆண்டு, ஜடேஜா ட்விட்டர் பக்கத்தில், "என்னை நியாயந்தீர்க்க முயற்சிக்காதீர்கள் நண்பரே. நான் என்ன செய்தேன் என்று உங்களுக்குத் தெரியாது." என்று பதிவிட்டார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜடேஜா இந்த பதிவை நினைவுபடுத்தினார். அவர் கேள்வியைத் தவிர்க்கவில்லை, ஆனால் பதிலளித்தார். “நான் சிறப்பாகச் செயல்படாத நாட்களில், அவர்கள் என்னைப் பெயர் சொல்லி ட்ரோல் செய்யத் தொடங்குகிறார்கள். இந்த நிலைக்கு வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று தெரியாமல் சொல்கிறார்கள். சிறிய, சிறிய விஷயங்கள்… பல போராட்டங்களும் தியாகங்களும் எனக்கு இப்போது நினைவில் இல்லை." என்று கூறியிருந்தார்.

publive-image

அவர் தனது குரலை உயர்த்தி மேலும் பேசுகையில், “கணினியின் முன் அமர்ந்திருக்கும் சும்மா இருப்பவர்களுக்கு எதுவும் செய்ய முடியாது, அவர்கள் உட்கார்ந்து மீம்ஸ் செய்கிறார்கள், தங்கள் மனதில் தோன்றுவதை எழுதுகிறார்கள் … நேர்மையாகப் பாருங்கள், அந்த விஷயங்கள் எனக்கு முக்கியமில்லை. அவர்கள் அப்படிச் செய்திருந்தால், நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன்… நான் இங்கு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது. அவர் ஐபிஎல் விளையாடி இவ்வளவு பணம் சம்பாதிப்பதாக சொல்கிறார்கள்… என்னை நம்புங்கள், ஐபிஎல்லில், அவர்கள் உங்கள் முகத்தைப் பார்த்து தேர்வு செய்ய மாட்டார்கள்." என்றார்.

ஐபிஎல்லின் இறுதி நாளில், அவர் நிச்சயமாக தனது முகத்திற்காக எடுக்கப்படவில்லை என்பதைக் காட்டினார். கடைசி இரண்டு பந்துகளில் அவர் அடித்த 10 ரன்கள் அவருக்கும் ரசிகர்ளுக்கும் இடையிலான தூரத்தைக் குறைக்க உதவியிருக்கும். 'தல' தோனி அடுத்த ஆண்டு தொடரிலும் களமாடுவர். அப்போது சேப்பாக்கம் மீண்டும் சூடுபிடிக்கும். பனிக் கட்டியை உடைக்க, அவர்கள் ஜடேஜாவை 'சின்ன தல' என்று அழைக்கத் தொடங்க வேண்டும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Super Kings Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Ipl Finals Gujarat Titans Csk Ms Dhoni Ravindra Jadeja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment