IPL 2024 | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வியாழக்கிழமை தர்மசாலாவில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த அபார வெற்றியின் மூலம் 10 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் 7 -வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி, +0.217 என்கிற நல்ல நெட் ரன்ரேட்டுடன் இந்த சீசனில் ஐ.பி.எல் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஆனால், பெங்களூரு அணி எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதிர்ஷ்டவசமாக, அவர்கள் மீதமுள்ள 2 போட்டிகளை தங்களது சொந்த மைதானத்தில் தான் விளையாடுகிறார்கள்.
இந்த 2 போட்டிகளில் வென்று விட்டால் பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடுமா? என்றால், இல்லை என்பது தான். அவர்கள் 2 போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது, மற்ற அணிகளின் முடிவுக்காகவும் அவர்கள் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், பெங்களூரு அணி ஐ.பி.எல் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்தும், எந்த வெற்றி பெற்றால் அல்லது எந்த அணியின் தோல்வி அவர்களுக்கு சாதகமாக அமையும் என்பது குறித்தும் இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
பெங்களூரு அணி ஐ.பி.எல் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பது மேலே உள்ள அட்டவணையில் இருந்து நமக்கு தெளிவாகத் தெரிய வருகிறது. அப்படி அவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் 14 புள்ளிகளைப் பெறுவார்கள். பின்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகள் - எப்படியான முடிவு கிடைத்தால் பெங்களூரு அணிக்கு சாதகம்
இன்று வெள்ளிக்கிழமை நடக்கும் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் குஜராத் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால், சென்னை அணி 12 புள்ளிகளுடன் இருக்கும்.
நாளை சனிக்கிழமை நடக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டியில், எந்த அணி வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அது பெங்களூரு அணியின் பிளேஆஃப் வாய்ப்புகளை அதிகம் பாதிக்காது. ஏனென்றால், கொல்கத்தா அணி ஏற்கனவே அதன் பிளேஆஃப் இடத்தை உறுதி செய்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளை மட்டுமே எட்டக்கூடிய மும்பை, ஐ.பி.எல் 2024 பிளேஆஃப் ரேஸில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்ட முதல் அணியாக உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Can RCB make it to IPL playoffs after PBKS game? Yes, here’s a match-by-match breakdown of how
மே 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியில், சென்னை அணி ராஜஸ்தானிடம் தோற்க வேண்டும். அப்படி நடந்தால், சென்னை அணி 12 புள்ளிகளுடன் இருக்கும்.
மே 13 ஆம் தேதி திங்கள்கிழமை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் போட்டியில் 12 புள்ளிகளைப் பெற பெங்களூரு நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.
மே 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி பெங்களூரு அணியின் தலைவிதியில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு ஆட்டம்.
மே 15 ஆம் தேதி புதன்கிழமை, டெல்லி கேபிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில், எந்த அணி வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகள் கிடைக்கும், எனவே, இந்தப் போட்டியை பெங்களூரு அணி ரசிகர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய போட்டியாக இருக்கும். இதில் வெற்றி பெறும் அணி லீக் கட்டத்தின் கடைசி ஆட்டத்தில் தோல்வி பெற வேண்டும் என அவர்கள் நம்ப வேண்டும்.
மே 16 ஆம் தேதி வியாழக்கிழமை, ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி பெங்களூரு அணியின் தலைவிதியில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு ஆட்டம் ஆகும்.
மே 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டியில் குஜராத் தோல்வியுற்றால், ஐதராபாத் அணி 14 புள்ளிகளுடன் இருக்கும்.
மே 18 ஆம் தேதி சனிக்கிழமை, மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதும் போட்டியில், பெரிய நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் லக்னோ அணியை மும்பை வீழ்த்த வேண்டும் பெங்களூரு அணி நம்ப வேண்டும்.
மே 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியில், 14 புள்ளிகளைப் பெற பெங்களூரு அணி நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.
மே 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில், பஞ்சாப் அணி ஐதராபாத் அணியை தோற்கடிக்க வேண்டும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியைத் தவிர, மற்ற அனைத்து போட்டிகளும் தங்கள் வழியில் சென்றால் பெங்களூரு அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இந்த போட்டி தான் பெங்களூரு அணி பிளேஆஃப் சுற்றில் யாரை சந்திக்கும் என்பதை தீர்மானிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.