இந்திய மண்ணில் இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பை வென்று அசத்தியது. அந்த அணியினர் முதல் முறை கோப்பையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். துரதிஷ்டவசமாக, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்து வெளியே நடந்த கடும் நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதமாக உயிரிழந்தார்கள். 56 பேர் காயமடைந்தார்கள்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இந்நிலையில், கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 27 வயதான யாஷ் தயாள் ஆடி இருந்தார். இந்த நிலையில், கிரிக்கெட் வீரரும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி) வீரருமான யாஷ் தயாள் இளம் கிரிக்கெட் வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் யாஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் யாஷ் தயாளை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.
இந்த பரபரப்பு முடிவடைதற்குள் யாஷ் தயாள் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த அந்த புகாரில், கிரிக்கெட்டில் தன்னை வளர்த்துவிடுவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2 ஆண்டுகளாக யாஷ் தயால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். அந்த பெண் பாதிக்கப்பட்டபோது, அவருக்கு 17 வயதே ஆனதால், யாஷ் தயாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) ஜூலை 23 அன்று பதியப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமைக்கான தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
"முதல் சம்பவம் (பாலியல் பலாத்காரம்) 2023 இல் நடந்துள்ளது. அப்போது அந்தப் பெண்ணுக்கு 17 வயது. மிகச் சமீபத்திய சம்பவம் ஏப்ரல் 2025 இல் ஜெய்ப்பூரில் நடந்தது. சமீபத்திய பாலியல் பலாத்காரம் இந்தியன் பிரீமியர் லீக்கின் போது நடந்ததாகக் கூறப்படுகிறது." என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஐ.பி.எல் தொடருக்கான சில போட்டிகள் ஜெய்ப்பூரிலும் நடந்தது குறிபிடத்தக்கது.