IPL 2024 | Chennai Super Kings | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறும் 68-வது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) எதிர்கொள்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RCB vs CSK 2024, IPL Match Today
இந்த தொடரில் சிறந்த நெட் ரன் ரேட்டுடன் (14 புள்ளிகள், நெட் ரன் ரேட் - 0.528) இருக்கும் நடப்புச் சாம்பியனான சி.எஸ்.கே, 12 புள்ளிகள் மற்றும் 0.387 நெட் ரன் ரேட்டுடன் இருக்கும் ஆர்.சி.பி அணியை எதிர்கொள்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் சந்திக்கும் இவ்விரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கடுமையாக போட்டி போடுகின்றன.
இப்போட்டிக்கு மழை அச்சுறுத்தல் நிலவும் சூழலில், மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால், சி.எஸ்.கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அதே நேரத்தில், ஆர்.சி.பி அணி குறைந்தபட்சம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது 11 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டிப் பிடிக்க வேண்டும்.
ஆர்.சி.பி vs சி.எஸ்.கே: இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்:
ஆர்.சி.பி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யாஷ் தயாள், கர்ண் சர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன்
இம்பாக்ட் பிளேயர்: ஸ்வப்னில் சிங்
சி.எஸ்.கே: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே
இம்பாக்ட் பிளேயர்: சிமர்ஜீத் சிங்.
ஆர்.சி.பி vs சி.எஸ்.கே: நேருக்கு நேர்
விளையாடிய போட்டிகள்: 33, ஆர்.சி.பி வெற்றி: 10, சி.எஸ்.கே வெற்றி: 22, முடிவு இல்லாத போட்டி: 1
பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி vs சி.எஸ்.கே நேருக்கு நேர்
விளையாடிய போட்டிகள்: 10, ஆர்.சி.பி வெற்றி: 4, சி.எஸ்.கே வெற்றி: 5, முடிவு இல்லாத போட்டி: 1
பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி அணியின் ஒட்டுமொத்த சாதனை
விளையாடிய போட்டிகள்: 90, வெற்றி: 42, தோல்வி: 43, சமநிலை: 1, முடிவு இல்லாத போட்டி: 4
ஆர்.சி.பி vs சி.எஸ்.கே: பிட்ச் ரிப்போர்ட்
இந்த சீசனில் பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடிய மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 193.
ஆர்.சி.பி vs சி.எஸ்.கே: வானிலை அறிக்கை
வானிலை முன்னறிவிப்பின்படி, போட்டி நடக்கும் பெங்களூரு நகரில் இன்று (மே 18) மாலையில் மழை பெய்ய 66 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் சனிக்கிழமை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆர்.சி.பி vs சி.எஸ்.கே: லைவ்ஸ்ட்ரீமிங் விவரங்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) - சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டி ஜியோசினிமா ஆப்பில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் ஒளிபரப்பப்படும்.
ஆர்.சி.பி vs சி.எஸ்.கே: இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்
ஆர்.சி.பி: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டகர், விஜய்குமார் வைஷாக், ஆகாஷ் தீப், முகமது முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு ஷர்மா, ராஜன் குமார், கேமரூன் கிரீன், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் குர்ரன், லாக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங் மற்றும் சவுரவ் சவுகான்.
சி.எஸ்.கே: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர், ஷேக் ரஷீத், மொயீந்த் அலி, நிஷாந்த் அலி, நிஷாந்த் அலி, நிஷாந்த் அலி , அஜய் ஜாதவ் மண்டல், பிரசாந்த் சோலங்கி, முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், ஆர்எஸ் ஹங்கர்கேகர் மற்றும் ஆரவெல்லி அவனிஷ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.