Royal Challengers Bangalore vs Chennai Super Kings IPL 2024 Live Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறும் 68-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) - சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RCB vs CSK Live Score, IPL 2024
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியில் விராட் கோலி பாப் டூபிளசிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 3 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
சற்று நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், டூபிளசிஸ் நிதாமான விளையாட மறுமுனையில், விராட்கோலி அதிரடியில் இறங்கினார். இதனால் ரன் வேகம் அதிகரித்த நிலையில், முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தபோது, அரைசதத்தை நெருங்கிய விராட்கோலி 47 (29 பந்து 3 பவுண்டரி 4 சிக்சர்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த படிதார் டூபிளசியுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.
விராட்கோலி அவுட் ஆனவுடன் அதிரடியில் இறங்கிய டூபிளசிஸ் 33 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், 39 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அதிரடியாக விளையாடிய படிதார், 23 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 6 பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்களும், மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 16 ரன்களும் எடுத்து வெளியேறிய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடிய கிரீன் 17 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
சென்னை அணி தரப்பில் தாகூர் 2 விக்கெட்டுகளும், சாண்ட்னர், தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். சென்னை அணியில், சாண்ட்னர் மற்றும் தீக்ஷனாவை தவிர மற்ற அனைவருமே அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். இந்த போட்டியில் 201 ரன்கள் எடுத்தால் ப்ளேஅப் வாய்ப்பு சென்னை அணிக்கு கிடைக்கும் என்பதால் இந்த போட்டி பரபரப்பு ஏற்பட்டது.
219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். இதனால் ரன் கணக்கை தொடங்கும் முன்பே சென்னை அணி விக்கெட் கணக்கை தொடங்கிய நிலையில், அடுத்து களமிறங்கிய மிச்செல் 4 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிள ரஹானே ரச்சினுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடி, 3-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த நிலையில், ரஹானே 22 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷிவம் டூபே களமிறங்கிய நிலையில், அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 31 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், 37 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 61 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
அடுத்து டூபே 7 ரன்களிலும், சாண்டனர் 3 ரன்களிலும் வீழ்ந்த நிலையில், அடுத்து தோனி களமிறங்கி ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெற்றியை நோக்கி அழைத்து செல்லாவிட்டாலும் 201 ரன்கள் எடுத்தால் ப்ளேஅப்க்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், அதற்கான முயற்சியில் ஈடுபட்டது. இதனால் ப்ளேஅப் தகுதிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் தோனி சிக்சர் அடித்த நிலையில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனால் 4 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில், 3வது பந்தை சந்தித்த ஷர்துல் தாகூர் ரன் எடுக்காத நிலையில், 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதனால் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5-வது பந்தை சந்தித்த ஜடேஜா பந்தை மிஸ் செய்ததால், பெங்களூர் அணி ப்ளேஅப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
May 18, 2024 23:50 IST18 ஓவர்கள் முடிவில் சென்னை 166/6
18 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 13 ரன்களுடனும் ஜடேஜா 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சென்னை அணியின் வெற்றிக்கு 12 பந்துளில் 53 ரன்கள் தேவை
-
May 18, 2024 23:31 IST15 ஓவர்களில் சென்னை 130/6
15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 130 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 90 ரன்கள் தேவை.
-
May 18, 2024 23:21 ISTரச்சின், டூபே அடுத்தடுத்து அவுட்
அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த ரச்சின் ரவீந்திரா துரதிஷ்டவசமான ரன் அவுட் ஆனார். 37 பந்துகளை சந்தித்த அவர், 5 பவுண்டரி 3 சிக்சருடன் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் ஷிவம் டூபே 15 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். தற்போது சென்னை அணி 119/5
-
May 18, 2024 23:11 ISTரச்சின் ரவீந்திரா அரைசதம்
தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடியாக விளையாடி வரும் ரச்சின் ரவீந்திரா 31 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
-
May 18, 2024 23:00 IST3-வது விக்கெட்டை பறிகொடுத்த சென்னை
9.1 ஓவர்களில் 85 ரன்கள் குவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது விக்கெட்டை பறிகொடுத்துள்ளது, 22 பந்துகளை சந்தித்த ரஹானே 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
-
May 18, 2024 22:40 IST6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 58/2
6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் 23 ரன்களுடனும், ரஹானே 22 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.
-
May 18, 2024 22:25 IST2-வது விக்கெட்டை பறிகொடுத்த சென்னை
3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டேரில் மீச்செல் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்துள்ளார்.
-
May 18, 2024 22:13 ISTமுதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த ருத்துராஜ்
ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரை வீசிய மெக்ஸ்வெல் முதல் பந்திலேயே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்தினார்.
-
May 18, 2024 21:27 IST16 ஓவர்கள் முடிவில் 155/2
16 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. கிரீன் 22 ரன்களுடனும், படிதார் 28 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
-
May 18, 2024 21:08 ISTடூபிளசிஸ் ரன் அவுட்
அரைசதம் கடந்து விளையாடி வந்த பாப் டூபிளசிஸ் எதிர்முனையில் இருந்த ரஜத் படிதார் அடித்த பந்து சாண்ட்னர் கைப்பட்டு ஸ்டெம்பை தாக்கியதால் ரன்அவுட் முறையில் வெளியேறினார். 39 பந்துகளை சந்தித்த டூபிளசிஸ் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்தார்.
-
May 18, 2024 20:59 ISTடூபிளசிஸ் அரைசதம்
தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய கேப்டன் பாப் டூபிளசிஸ் விராட்கோலி அவுட் ஆன பிறகு சிக்சர் பவுண்டரிகளாக விளாசிய நிலையில், 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
-
May 18, 2024 20:54 ISTஅரைசதத்தை தவறவிட்ட விராட்கோலி
அதிரடியாக விளையாடிய விராட்கோலி 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில், சாண்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து அரைசதத்தை தவறிவிட்டார். 10 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 18, 2024 20:35 IST6 ஓவர்கள் முடிவில் 42/0
6 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 42 ரன்கள் எடுத்துள்ளது. விராட்கோலி 22 ரன்களுடனும், டூபிளசிஸ் 20 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
-
May 18, 2024 20:27 IST4 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 34/0
4 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 33 ரன்கள் குவித்துள்ளர். விராட்கோலி 21 ரன்களுடனும், டூபிளசிஸ் 13 ரன்களுடனம் களத்தில் உள்ளனர்.
-
May 18, 2024 19:46 ISTமழை குறுக்கீடு
3 ஓவர்களில் பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ள நிலையில், மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. விராட்கோலி 9 பந்துகளில் 19 ரன்களும், டூபிளசிஸ் 9 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து களத்தில்உள்ளனர்.
-
May 18, 2024 19:42 IST2 ஓவர்கள முடிவில் பெங்களூர் அணி 18/0
2 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 18 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 6 ரன்களிலும், டூபிளசிஸ் 12 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
-
May 18, 2024 19:03 ISTசி.எஸ்.கே பந்துவீச முடிவு
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பெங்களூர் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
-
May 18, 2024 18:36 ISTமைதானத்தில் மழை : போட்டி நடைபெறுமா?
ஆர்சிபி - சிஎஸ்கே இடையிலான போட்டி நடைபெறவுள்ள சின்னசாமி மைதானத்தில் , தற்போது மழை பெய்து வருகிறது!
-
May 18, 2024 17:17 ISTபெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி அணியின் ஒட்டுமொத்த சாதனை
விளையாடிய போட்டிகள்: 90, வெற்றி: 42, தோல்வி: 43, சமநிலை: 1, முடிவு இல்லாத போட்டி: 4
-
May 18, 2024 17:17 ISTபெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி vs சி.எஸ்.கே நேருக்கு நேர்
விளையாடிய போட்டிகள்: 10, ஆர்.சி.பி வெற்றி: 4, சி.எஸ்.கே வெற்றி: 5, முடிவு இல்லாத போட்டி: 1
-
May 18, 2024 17:16 ISTஆர்.சி.பி vs சி.எஸ்.கே: இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்:
சி.எஸ்.கே: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே
இம்பாக்ட் பிளேயர்: சிமர்ஜீத் சிங்.
-
May 18, 2024 17:16 ISTஆர்.சி.பி vs சி.எஸ்.கே: இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்:
ஆர்.சி.பி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யாஷ் தயாள், கர்ண் சர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன்
இம்பாக்ட் பிளேயர்: ஸ்வப்னில் சிங்
-
May 18, 2024 17:15 ISTநேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு 10ல் வெற்றி பெற்றுள்ளது, சென்னை அணி 21 முறை வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி முடிவு இல்லாமல் முடிந்தது.
-
May 18, 2024 17:00 ISTஆர்.சி.பி - சி.எஸ்.கே மோதல்
ஐ.பி.எல் 2024 தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில்அரங்கேறும் 68-வது லீக் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
-
May 18, 2024 16:32 IST‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐ.பி.எல் 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆர்.சி.பி - சி.எஸ்.கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.