IPL 2024 | Royal Challengers Bangalore | Delhi Capitals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கும் 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோஹ்லி, வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கர்ண் ஷர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள்
டெல்லி கேப்பிடல்ஸ்: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), ஷாய் ஹோப், குமார் குஷாக்ரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), குல்தீப் யாதவ், ரசிக் தார் சலாம், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
பெங்களூரு பேட்டிங்
பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக டூபிளசிஸ் மற்றும் கோலி களமிறங்கினர். டூபிளசிஸ் 6 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஜாக்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கோலி 27 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ஜாக்ஸ் உடன் ரஜத் இணைந்தார். இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அரை சதம் விளாசிய படிதார் 52 ரன்களில் அவுட் ஆனார். லோம்ரோர் களமிறங்கிய சிறிது நேரத்தில் ஜாக்ஸ் 41 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து கிரீன் களமிறங்கி சிறப்பாக ஆடினார். மறுமுனையில் தினேஷ் கார்த்திக் களமிறங்கிய நிலையில், லோம்ரோர் 13 ரன்களில் வெளியேறினார். அடுத்து தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். அடுத்த வந்த ஸ்வப்னிலும் டக் அவுட் ஆனார். கரன் சர்மா 6 ரன்களில் ரன் அவுட் ஆக, மறுமுனையில் இறங்கிய சிராஜ் கடைசி பந்தில் ரன் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். கிரின் 32 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் கலீல், ரஷிக் தலா 2 விக்கெட்களையும், இஷாந்த், முகேஷ், குல்தீப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த சீசனில் இதுவரை ஆடிய 12 போட்டிகளில் பெங்களூரு 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று மிரட்டி எடுத்து வருகிறது. பிளே - ஆஃப்க்குள் நுழையும் வேட்கையுடன் தீவிரமாக செயல்பட்டு வரும் அந்த அணி அதே உத்வேகத்தில் களமிறங்கும்.
மறுபுறம், இதுவரை ஆடிய 12 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று டெல்லி அணி 5வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் டெல்லி அணி களமாடும். புள்ளிகள் பட்டியலில் பெங்களூருவை விட முன்னிலை வகிக்கும் டெல்லி அதே நிலையை தொடரவே நினைக்கும். மொத்தத்தில், இன்னும் பிளே - ஆஃப் ரேஸில் இருக்கும் இவ்விரு அணிகள் மோதும் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், பெங்களூரு 18ல் வெற்றி பெற்றுள்ளது, டெல்லி 11 முறை வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி முடிவு இல்லாமல் முடிந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.